பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்

Veteran singer S. Janakis Son Passedaway : பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது மகன் முரளி கிருஷ்ணன் என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

பழம்பெரும் பாடகி எஸ். ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா காலமானார்

எஸ்.ஜானகி - முரளி கிருஷ்ணன்

Published: 

22 Jan 2026 11:40 AM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் பாடகி எஸ்.ஜானகி. ஜானகியின் குரலில் வெளியான பாடல்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். தனது குரலால் ஒட்டுமொத்த மக்களின் மனதிலும் இடம் பிடித்த ஜானகி தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பல நூறு படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் கடந்த 1959-ம் ஆண்டு ராம் பிரசாத் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து இந்த தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் தான் உள்ளார். பின்பு பாடகி ஜானகியின் கணவர் ராம் பிரசாத் கடந்த 1997-ம் ஆண்டு காலமானார். அதனைத் தொடர்ந்து ஜானகி தனது ஒரே மகன் முரளி கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார்.

முரளி கிருஷ்ணா ஒரு பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் சினிமாவில் பலப் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த முரளி கிருஷ்ணா கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இப்படி இருக்கும் சூழலில் அவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலாமானா. இதனைப் பாடகி சித்ரா தனது சமூகவலைதப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு பாசமான சகோதரனை இழந்துவிட்டோம் – பாடகி சித்ரா:

எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகனான முரளி அண்ணாவின் திடீர் மறைவுச் செய்தியை இன்று காலை கேட்டு அதிர்ச்சியடைந்தோம். ஒரு பாசமான சகோதரனை இழந்துவிட்டோம். இந்தத் தாங்க முடியாத வலியையும் துயரத்தையும் தாங்கிக்கொள்ள, அம்மாவுக்கு இறைவன் பலம் அளிக்கட்டும். பிரிந்த ஆன்மா நித்திய உலகில் அமைதியுடன் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி என்று பாடகி சித்ரா தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

Also Read… மங்காத்தா படத்தை ஏன் ஒத்திவைக்க சொல்லி கேட்கவில்லை… மோகன் ஜி விளக்கம்

பாடகி சித்ரா வெளியிட்ட முகநூல் பதிவு:

Also Read… சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மும்பை - அகமதாபாத் இடையே வரும் மாற்றம்..
கிரீன்லாந்தில் நிலவும் பதற்றம்.. தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்!!
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் வீடியோ.. என்ன தெரியுமா?