மெண்டல் மனதில் படத்திலிருந்து உயிரே உயிரே பாடலை வெளியிட்ட கார்த்தி!

Uyire Uyire Song Lyrical Video Mental Manadhil Movid: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நாயகனாக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி உள்ள மெண்டல் மனதில் படத்தில் இருந்து உயிரே உயிரே பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி உள்ளது.

மெண்டல் மனதில் படத்திலிருந்து உயிரே உயிரே பாடலை வெளியிட்ட கார்த்தி!

மெண்டல் மனதில்

Published: 

25 Feb 2026 19:10 PM

 IST

துள்ளுவதோ இளமை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் காதலை மையமாக வைத்தே வெளியாகி இருந்தது. செல்வராகவன் இயக்கத்தில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படங்கள் அதிகமாக இருந்தாலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக படங்களை இயக்குவதில் இருந்து விலகி படங்களில் நடிகராக நடிப்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன்படி செல்வராகவன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த செல்வராகவன் தற்போது மீண்டும் படங்களை இயக்குவது குறித்து அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.

அதன்படி இயக்குநர் செல்வராகவன் தற்போது 7 ஜி ரெயின்போ காலணி 2 மற்றும் மெண்டல் மனதில் என்று அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இதில் மெண்டல் மனதில் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மாதுரி ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது.

மெண்டல் மனதில் படத்தின் பாடலை வெளியிட்ட நடிகர் கார்த்தி:

அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மாதுரி ஜெயின் நடிப்பில் உருவாகி உள்ள மெண்டல் மனதில் படத்தில் இருந்து உயிரே உயிரே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை நடிகர் கார்த்தி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ள நிலையில் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். இந்த நிலையில் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Mental Manadhil: ‘மெண்டல் மனதில்’ பட முதல் பாடலை வெளியிடும் நடிகர் கார்த்தி – அறிவிப்பு இதோ!

நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

Follow Us
நாய் நக்கிய காயம்: செப்சிஸால் நான்கு உறுப்புகள் துண்டிப்பு – அதிர்ச்சி சம்பவம்
பழைய ஸ்மார்ட்போனில் ஒளிந்திருக்கும் அரிய பொக்கிஷம்.. இந்தியாவின் 'அணு இறையாண்மைக்கு' உதவும் இ-கழிவு மறுசுழற்சி!
கொள்ளையர்களை விரட்டிய என்.ஆர்.ஐ பெண் – லூதியானாவில் பரபரப்பு சம்பவம்
"ரியல் கேரளா ஸ்டோரி".. 2 வாரங்களாக மெட்ரோ தூணில் தவித்த பூனை பத்திரமாக மீட்பு!