Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ

Watch To Watch: மே மாதம் தொடங்கியதில் இருந்தே திரையரங்குகளில் படங்கள் வெளியீடு அதிகரித்த நிலையில் ஓடிடியில் படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. அதன்படி இனிவரும் நாட்களில் அஜித் மற்றும் பேசில் ஜோசஃப் ஆகியோரின் நடிப்பில் மே மாதத்தில் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் லிஸ்ட் குறித்து தற்போதும் பார்க்கலாம்.

ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள தென்னிந்திய மொழி படங்களின் லிஸ்ட் இதோ
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 04 May 2025 17:19 PM

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தை தொடந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடித்தப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நாயகியாக நடித்திருந்தார். முன்னதாக விடாமுயற்சி படத்திலும் நடிகர் அஜித் குமாருக்கு த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்திருந்தது குறிப்பிடத்தகது. இந்த நிலையில் இந்த ஆண்டு மட்டுமே இதுவரை இரண்டாவது முறையாக இந்த ஜோடி திரையரங்குகளில் ரசிகர்களுக்கு காட்சி அளித்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் குட் பேட் அக்லி வெளியானது. இதில் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சிம்ரன், ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் மற்றும் பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மரணமாஸ்: மோலிவுட்டின் டார்க் காமெடி திரைப்படமாக ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு மரணமாஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிவபிரசாத் இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

நடிகர் டொவினோ தாமஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.கே.வாக ராஜேஷ் மாதவன், சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா, பாபு ஆண்டனி, பூஜா மோகன்ராஜ், அனிஷ்மா அனில்குமார், ஜோமோன் ஜோதிர், புலியானம் பவுலோஸ் மற்றும் தீரஜ் டென்னி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த்துள்ளனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தை ஓடிடியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் சோனி லிவ் ஓடிடியில் மே மாதம் 15-ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராபின்ஹுட்: நடிகர் நித்தின் நடிப்பில் தெலுங்கு மொழியில் வெளியான படம் ராபின்ஹுட். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி குடுமலா இயக்கத்தில் மார்ச் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது இந்தப் படம்.

இந்தப் படத்தில் நிதின் உடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீலீலா, வெண்ணிலா கிஷோர், ராஜேந்திர பிரசாத், தேவதத்தா நாகே மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி படம் மே மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...
பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பார் - ராஜ்நாத் சிங்...
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்
அந்த மாதிரி படங்களை தவிர்பதற்கு காரணம் இது தான் - நடிகர் மாதவன்...
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!
சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு - வைரல் வீடியோ!...
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்க... ராஷ்மிகா...