சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான் – த்ரிஷா சொன்ன விசயம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்தி வைத்துள்ள இவர் நடிக்க வருவதற்கு முன்பு சினிமாவில் நடிப்பது தனது விருப்பம் இல்லை என்பது போல பேசியிருக்கிறார்.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க தைரியம் கொடுத்தது அதுதான் - த்ரிஷா சொன்ன விசயம்

த்ரிஷா கிருஷ்ணன்

Published: 

04 Jun 2025 07:30 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பு அழகிப் போட்டியில் கலந்துகொள்வது மற்றும் விளம்பர படஙக்ளில் நடிப்பது என்று தொடர்ந்து இருந்து வந்தார். நடிகையாக வருவதற்கு முன்பு பேட்டி ஒன்றில் Acting is not my cup of tea அதாவது நடிகையாவது எனது விருப்பம் இல்லை என்பது போல தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தப் பிறகு நீங்க பல ஹிட் படங்களில் நடித்து இருக்கீங்க என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை த்ரிஷா ஒரு படத்தின் ஹிட் தான் அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க தைரியம் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் திரைத்துறையில் அறிமுகம் ஆவதற்கு முன்பு த்ரிஷாவின் வீட்டில் உள்ளவர்கள் அவரை நடிப்பதற்கு முன்னதாக அனுமதிக்கவில்லை என்றும் விளம்பர படங்களில் நடிப்பதற்கும் மாடலிங் துறையிலும் மட்டுமே அனுமதித்ததாகவும் ஒரு படத்தின் ஹிட் கிடைத்த பிறகே தொடர்ந்து நடிக்க முடிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே ஹிட் கொடுக்கும் நடிகை த்ரிஷா:

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தொடந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டில் த்ரிஷாவின் நடிப்பில் 3-வது படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா வித்யாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இன்ஸ்டா பதிவு:

அது மட்டும் இன்றி நடிகை த்ரிஷா சூர்யாவின் 45-வது படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில் விரைவில் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.