Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!

Trisha Krishnan Silence Breaker: சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். சமீப காலமாக இவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டதாகவும், இவர் திருமணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. அந்த வகையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

Trisha Krishnan: சினிமாவிலிருந்து விலகிவிட்டேனா? தொழிலதிபரை திருமணம் செய்து நான்கு குழந்தை- விமர்சனங்களுக்கு திரிஷா போட்ட பதிவு!

திரிஷா

Updated On: 

07 Apr 2026 12:20 PM

 IST

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து கலக்கிவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். ஆனால் இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதையடுத்து 2026ம் ஆண்டில் திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக இவர் நடித்திருக்கும் நிலையில், வரும் 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் சமீப காலமாக திரிஷா குறித்த விமர்சனங்கள் மற்றும் அவர் குறித்த போலி தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.

திரிஷா கிருஷ்ணன் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார், திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வைரலாக பரவிவருகிறது. அந்த வகையில் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரிஷா பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பிரசாந்தை பார்த்து பொறாமை.. அவரின் படங்களை வியந்து பார்த்திருக்கிறேன் – விஷால் பேச்சு!

விமர்சனங்கள் குறித்து திரிஷா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி:

நடிகை திரிஷா அந்த பதிவில், “நான் சினிமாவிலிருந்து விலகிவிட்டேன் என நினைக்கிறேன். ஒரு பெரிய பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, நேற்றுதான் என் நான்கு குழந்தைகளுக்கு 2 வயது ஆனது. இதுபோல நான் வேறு எதாவது சேர்க்கவேண்டுமா?. இல்லை, இன்றைய புனைகதைக்கு இது போதுமா?” என்பது போல அவர் அதில் பகிர்ந்துள்ளார். தற்போது இதுகுறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகபரவிவருகிறது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியாகும் AA22xA6 பட டைட்டில் போஸ்டர் – படக்குழு அறிவிப்பு!

திரிஷா கிருஷ்ணன் குறித்து பரவிவரும் சர்ச்சைகள்:

பொதுவாக நடிகைகள் குறித்த சர்ச்சை மற்றும் தவறான கருத்துக்கள் இணையத்தில் பரவிவருவது வழக்கமே. அதுபோல நடிகை திரிஷா குறித்த தவறான கருத்துக்கள் இணையத்தில் பரவிவருகிறது. சமீபத்தில் இவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளதாகவும், அவர் பெற்றோர் பார்த்த மாப்பிளை என்றும் கூறப்பட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் திரிஷா பேசியிருந்தார்.

மேலும் இவர் தளபதி விஜய்யுடன் திருமணம் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், மேலும் கிசுகிசுக்கப்பட்டார். அந்த வகையில் அதைத் தொடர்ந்து தற்போது இவர் சினிமாவிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் பரவிவருகிற நிலையில், அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தனது இந்தக்கிராம் பக்கத்தில் விளக்கமளித்து பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்