Trisha Krishnan: விரைவில் திரிஷாவுக்கு திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

Trisha Krishnan Wedding: தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக இருந்துவருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். 40வயதிற்கு மேல் ஆகி இன்னும் இவர் திருமணம் செய்த நிலையில், விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Trisha Krishnan: விரைவில் திரிஷாவுக்கு திருமணமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

திரிஷா கிருஷ்ணன்

Published: 

10 Oct 2025 15:23 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் சுமார் 22 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாகவே நடித்துவருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்து, பின் நடிகையாக வளர்த்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் தற்போதுவரையிலும் படங்கள் தயாராகிவருகிறது. இவர் தமிழில் இறுதியாக கமல்ஹாசன் (Kamal Hasaan) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) இணைந்து நடித்திருந்த “தக் லைஃப்” (Thug Life) படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, தெலுங்கில் சிரஞ்சீவியின் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீப காலமாக திரிஷாவின் திருமணம் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த வகையில் தற்போது, நடிகை திரிஷா கிருஷ்ணன் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை திரிஷா, சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் (Businessman from Chandigarh) ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும், இந்த வரனை திரிஷாவின் பெற்றோர்கள்தான் அமைத்துக்கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த தகவல் குறித்து நடிகை திரிஷாவும் எந்தவித அறிவிப்புகளும் இல்லை, இதை அவர் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இது உண்மையானால் விரைவில் இது தொடர்பாக திரிஷா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம்…. ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

நடிகை திரிஷா கிருஷ்ணனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்:

திரிஷாவின் ஆரம்ப காதல்

நடிகை திரிஷா கடந்த 2010ம் ஆண்டில் பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருந்தார். இவர்களின் காதல் நிச்சயம் வரை சென்றது. பின் சில காரணங்களால் அவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு இருவரும் விலகினர்.

இதையும் படிங்க: மிகவும் திறமையானவர்.. சாய் அபயங்கரைப் பாராட்டிய டியூட் பட தயாரிப்பாளர்!

மேலும் இதை தொடர்ந்து நடிகை திரிஷா தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் காதலித்துவருவதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகிவந்தன. ஆனாலும் இது தொடர்பான எந்தவித தகவலையும் திரிஷா உறுதிப்படுத்தவில்லை. அந்த வகையில் இவர் 42 வயதிலும் சிங்கிளாக படங்ககளில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவின் லேட்டஸ்ட் திரைப்படங்கள் :

நடிகை திரிஷா 42 வயதாகிய நிலையிலும், சினிமாவில் கதாநாயகியாகவே தொடர்ந்து நடித்துவருகிறார். இந்த் 2025ம் ஆண்டில் இதுவரை மட்டுமே இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் வெளியாகியுள்ளது. அஜித் குமாருடன் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும் டோவினோ தாமஸுடன் மலையாளத்தில் ஐடென்ட்டி திரைப்படம் மற்றும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் என  திரிஷாவின் நடிப்பில் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் 4 படங்கள் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்துவரும் விஸ்வம்பரா படம் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கிறது.