பேசில் ஜோசஃப் நடிக்கும் அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Athiradi Movie First Look Poster: மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பேசில் ஜோசஃப். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அதிரடி. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.

அதிரடி
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் பேசில் ஜோசஃப். முன்னதாக பலப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த பேசில் ஜோசஃப் தொடர்ந்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான மின்னல் முரளி படம் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இவர் படங்களை இயக்குவதில் இருந்து விலகி தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் அடுத்தடுத்து 4 படங்கள் வெளியானது.
அதன்படி பிரவின்கூடு ஷப்பு, பொன்மான், மரணமாஸ், ஹிருதயபூர்வம் என தொடர்ந்து 4 படங்களில் நடித்து இருந்தார். இதில் பொன்மான் மற்றும் மரணமாஸ் ஆகிய இரண்டு படங்களிலும் நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் பேசில் ஜோசஃப் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் அதிரடி.
பேசில் ஜோசஃப் நடிக்கும் அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது?
இந்த அதிரடி படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இயக்குநர் அருண் அனிருதன் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். படம் வருகின்ற 2026-ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் மூன்று முகம் – எப்போது தெரியுமா?
டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We are thrilled to reveal the first face of ATHIRADI
A film directed by Arun Anirudh and produced by Dr. Ananthu S & Basil Joseph, under the banners of #basiljosephentertainment and #drananthuentertainments
Releasing Onam 2026. Let the fireworks begin.#athiradionam #athiradi pic.twitter.com/kLDYg0izVg
— Tovino Thomas (@ttovino) December 28, 2025
Also Read… ‘இது விஜய் அண்ணாவின் அன்பு சாம்ராஜ்யம்’- நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட இயக்குநர் ரத்னகுமார்!