டாப் 5 சிறந்த மலையாள ஹாரர் படங்கள் – உங்கள் சாய்ஸ் எது?

அவர்களது மணிச்சித்திரதாழு (Manichithrathazhu) தான் சந்திரமுகியாக (Chandramukhi) , ஆப்தமித்ராவாக, பூல் புலயாவாக இந்தியாவையே கலக்கியது. அப்படி மலையாள திரையுலகில் விமர்சனங்கள் அடிப்படையில் சிறந்த 10 ஹாரர் படங்களை இப்பதிவில் பார்க்கலாம்

டாப் 5 சிறந்த மலையாள ஹாரர் படங்கள் - உங்கள் சாய்ஸ் எது?

சுரேஷ் கோபி - ஷோபனா - மோகன்லால் - மம்மூட்டி

Published: 

02 Apr 2025 10:17 AM

எந்த வகை ஜானராக இருந்தாலும் யதார்த்தமாக கதை சொல்வதில் வல்லவர்கள் மலையாள திரையுலகினர். கேரளாவின் உள்ள ஒவ்வொரு பகுதியின் சிறப்பம்சம், அம்மக்களின் பழக்க வழக்கங்கள் தங்களின் கதைகளில் அழகாக புகுத்தி சுவாரசியமாக கதை சொல்லிவருகின்றனர்.அதனால் தான் ஓடிடிக்களில் கொரியன் (Korean) படங்களுக்கு பிறகு மலையாள படங்களுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக கடந்து போகும் விஷயங்களை கதைகளாக மாற்றும் வல்லமை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. ஹாரர், திரில்லர் படங்களுக்கு அவர்கள் நிலப்பரப்பும் பெரிதும் கைகொடுக்கிறது. அவர்களது மணிச்சித்திரதாழு (Manichithrathazhu) தான் சந்திரமுகியாக (Chandramukhi) , ஆப்தமித்ராவாக, பூல் புலயாவாக இந்தியாவையே கலக்கியது. அப்படி மலையாள திரையுலகில் விமர்சனங்கள் அடிப்படையில் சிறந்த 10 ஹாரர் படங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மணிசித்திரதாழு (Manichithrathazhu)

ஒரு மனநல மருத்துவர் பழைய அரண்மனையின் பின்னால் இருக்கும் மர்மத்தை புரிந்துகொள்ள முற்பட அதன் காரணமாக ஏற்படும் எதிர்பாரா விளைவுகளே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் மோகன்லால் ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப் படம் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சந்திரமுகி என்ற பெயரிலும் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிக்க ஆப்தமித்ரா என்ற பெயரிலும் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் பூல் புலையா என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. அமேசான் பிரைம் வீடியோவில் இந்தப் படத்தை பார்க்கலாம்.

பூதகாலம் (2022)

ஆஷாவும் அவரது மகன் வினுவும் ஒரு வீட்டில் வசித்துவருகின்றனர். அந்த வீட்டில் உடல் நலம் இல்லாத ஆஷாவின் தாயும் அவர்களுடன் வசிக்கிறார். இந்த நிலையில் ஆஷாவின் தாய் இறந்துவிட அந்த வீட்டில் விசித்திரமான நிழக்வுகள் நடக்கின்றன. சில உருவங்கள் வினுவின் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கின்றன. இந்த நிலையில் அவர்கள் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் ஆஷாவாக ரேவதியும், வினுவாக ஷேன் நிகமும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ரோமாஞ்சம் (Romancham)

பெங்களூரின் புற நகர் பகுதியில் வசிக்கும் ஏழு இளைஞர்கள் விளையாட்டுத்தனமாக ஓஜா போர்டு மூலம் ஒரு பேயை வரவழைக்கிறார்கள்.இதனையடுத்து அவர்கள் வீட்டில் விசித்திரமான நிகழ்வுகள் நடிக்கின்றன. அதில் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்தப் படத்தை பார்க்கலாம்.

பிரம்மயுகம் (Bramayugam)

17 ஆம் நூற்றாண்டில் தேவன் என்ற நாட்டுப்புற பாடகர் எதிர்பாராத விதமாக ஒரு பழங்கால மாளிகைக்கு செல்கிறார். அந்த மாளிகையில் அமானுஷ்ய சக்திகளை எதிர்கொள்கிறார். அதிலிருந்தஅ அவர் எப்படி மீண்டார்கள் என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் மம்மூட்டி, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஆயுஷ்காலம் (Aayushkalam)

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பாலகிருஷ்ணனுக்கு கார் விபத்தில் இறந்த அபி என்பவரின் இதயம் கிடைக்கிறது. அபி ஆவியாக பாலகிருஷ்ணனனை பின் தொடர்கிறார். தன்னை கொன்ற பழிவாங்க பாலகிருஷ்ணனை பயன்படுத்திக்கொள்கிறார் என்பதே இதன் கதை. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணனாக முகேஷும், அபியாக ஜெயராமும் நடித்திருக்கின்றனர்.

 

Related Stories