எல்லா பிரச்னையும் ஓவர்… தொடங்கியது வா வாத்தியார் படத்தின் டிக்கெட் புக்கிங் – வைரலாகும் அப்டேட்
Vaa Vaathiyaar Movie Ticket Booking: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள வா வாத்தியார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

வா வாத்தியார்
தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் நடிகர் கார்த்தி. அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகர் கார்த்தி. அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கார்த்தியின் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வந்தால் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு மெய்யழகன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றது. அதில் குறிப்பாக நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் தற்போது திரையரங்குகளில் வெளியக உள்ள படம் வா வாத்தியார்.
தொடங்கியது வா வாத்தியார் படத்தின் டிக்கெட் புக்கிங்:
நடிகர் கார்த்தியின் நடிப்பில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வா வாத்தியார். இந்தப் படத்தினை இயக்குநர் நலன் குமாராசாமி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… Draupathi 2: பொங்கல் ரிலீஸில் இணைந்த மோகன் ஜி-யின் திரௌபதி 2 படம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
வா வாத்தியார் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
MGR is reborn ✨
But kadhayila twist-u 🔥💥#VaaVaathiyaar
Bookings now open on District & TicketNew apps 🎟️#Karthi #KrithiShetty #Sathyaraj #SanthoshNarayanan #NalanKumarasamy pic.twitter.com/xEYkfBUrj4— Seven Screen’s Cinemas (@7screenscinemas) January 13, 2026