கலையரசன் நடிப்பில் வெளியானது ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லர்

Trending - Official Trailer | நடிகர் கலையரசன் நாயகனகா நடித்துள்ள படம் ட்ரெண்டிங். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கலையரசன் நடிப்பில் வெளியானது ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லர்

ட்ரெண்டிங்

Published: 

09 Jul 2025 18:58 PM

நடிகர் கலையரசன் (Actor Kalaiyarasan) தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ட்ரெண்டிங். இந்தப் படத்தை இயக்குநர் சிவராஜ் எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராம் பிலிம் ஃபேக்டரி சார்பாக ஆனந்த் ஜி மற்றும் மீனாட்சி ஆனந்த் ஆகியோர் தயாரித்து வழங்குகின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

இணையத்தில் கவனம் பெறும் ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு இன்று 09-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில் இன்றை காலக்கட்டத்தில் சமூகத்தில் மக்கள் ட்ரெண்டிங் என்ற விசயத்திற்காக தங்களது சொந்த வாழ்க்கையை எப்படி எல்லாம் சீர்குழைத்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து இந்த ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரின் தொடங்கத்தில் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக மாறுவதால் எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று காட்டப்பட்டு பிறகு அந்த ட்ரெண்டிங்கிற்காக அவர்கள் எந்த அளவிற்கு தங்களது சொந்த வாழ்க்கையை பணையம் வைக்கிறார்கள் என்பதே படத்தின் கதையாக உள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் படம் வருகின்ற ஜூலை மாதம் 18-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அந்த ட்ரெய்லரில் குறிப்பிட்டுள்ளது.

Also read… வாரிசு நடிகராக இல்லை என்றால் சினிமாவில் அந்த வாய்ப்பே உங்களுக்கு கிடைக்காது – விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்

ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு:

Also read… நோ ஃபேமிலி… நோ ஃப்ரண்ட்ஸ்… கூலி படத்திற்காக இரண்டு வருஷம் கடினமா உழைச்சிருக்கேன் – லோகேஷ் கனகராஜ்

முன்னதாக நடிகர் கலையரசன் பட விழாவில் பேசியபோது தொடர்ந்து அவருக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தும் செத்துபோகும் கதாப்பாத்திரமாகவே இருக்கிறது என்றும், தமிழ் சினிமாவில் ஒரு கதாப்பாத்திரம் சாக வேண்டும் என்றால் அதை நான் தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என மிகவும் வேதனையாக பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.