விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Jason Sanjay Directorial Debut: நடிகர் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆவது குறித்த அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. இந்தப் படத்தின் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஜேசன் சஞ்சய் படம்
சினிமாவை பொருத்தவரை வாரிசுகளின் வருகை என்பது பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நடைபெறும் ஒன்றாக உள்ளது. அந்த வகையில் சினிமாவில், நடிப்பு, இசை, நடனம், தயாரிப்பு என எல்லா துறைகளிலும் பிரபலமாக இருப்பவர்கள் தொடர்ந்து தங்களது தொழிலில் அடுத்ததாக தங்களது வாரிசுகளை அறிமுகப்படுத்துவது வலக்கமாக உள்ளது. 80 மற்றும் 90களின் முன்னணி நடிகர்களாக இருந்தவர்களின் மகனோ அல்லது மகளோ தொடர்ந்து தற்போது சினிமாவில் நடிகர்களாக வலம் வருகிறார்கள். இது தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக உள்ளது. இதனை சினிமா வட்டாரத்தில் எந்தவித பின்புலனும் இல்லாமல் வந்து சாதிக்கும் பலர் தங்களின் வாய்ப்புகள் பாதிக்கப்படும் நிலையில் நெப்போடிசம் என்று வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
நெப்போடிசம் என்பது வாரிசு என்பதற்காகவே அந்த பணி சற்றும் தெரியாதவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதற்காக கூறப்படுகின்றது. ஆனால் சிலர் சினிமாவில் வாரிசு என்பதற்காக எளிதில் வாய்புகளைப் பெற்று இருந்தாலும் தங்களது திறமையால் ரசிகர்கள் மத்தியில் அந்த எண்ணத்தை மாற்றி தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கியும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் சஞ்சை இயக்கும் படத்தின் டைட்டில் என்ன?
இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் இயக்குநராக சினிமாவில் காலடி வைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்ஷன் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார். இவர் அவ்வபோது தமிழ் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் நாளை நவம்பர் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு படத்தின் டைட்டிலை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Also Read… 18 ஆண்டுகளைக் கடந்தது தனுஷின் சூப்பர் ஹிட் பொல்லாதவன் படம் – கொண்டாடும் ரசிகர்கள்
லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Get ready for the big reveal! ✨
The Title of #JSJ01 will be unveiled tomorrow at 10 AM.
Stay tuned! ⚡@official_jsj @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @sundeepkishan @MusicThaman @Cinemainmygenes @krishnanvasant @Dir_sanjeev #BenjaminM @hariharalorven… pic.twitter.com/0w4rQEqQ3y— Lyca Productions (@LycaProductions) November 9, 2025
Also Read… நாளை மாலை மாஸ்க் படத்தின் ஆடியோ லாஞ்ச்… ஆண்ட்ரியா வெளியிட்ட பதிவு!