சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்

Suriya 46 Movie: நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தை தொடர்ந்து கருப்பு மற்றும் சூர்யா 46 படங்களில் பிசியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சூர்யா 46 படத்தில் பிரபல நடிகரின் மகன் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் பிரபல நடிகரின் மகன்

சூர்யா 46

Published: 

20 Oct 2025 11:00 AM

 IST

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படம் ரெட்ரோ. கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் வெளியான கங்குவா படம் படு தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் பாடலில் நடிகர் சூர்யா ஆடும் நடன அசைவுகளையும் ரசிகர்கள் ரீ கிரியேட் செய்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் கருப்பு படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக  கூட்டணி வைத்தார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான லக்கி பாஸ்கர் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவை இயக்கி வருகிறார்.

சூர்யா 46 படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் ரவி தேஜாவின் மகன்:

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 46 படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ரவி தேஜாவின் மகன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இது தொடர்பான தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் சூர்யா 46 படக்குழு ஏதேனும் போஸ்டர் வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also Read… 2-வதாக பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்ட்டாகி போவது இவரா? வைரலாகும் தகவல்

சூர்யா 46 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சைக்கோ கில்லராக செல்வராகவன்… காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால்… ஆர்யன் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு