பூஜையுடன் தொடங்கியது மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ஷூட்டிங்
Drishyam 3: மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-வது பாகம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது 3-வது பாகம் தொடங்கியுள்ளது.

த்ரிஷ்யம் 3
மலையாள சினிமாவில் க்ரைம் த்ரில்லர் பாணியில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் (Mohanlal) நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர், நீரஜ் மாதவ், இர்ஷாத், குஞ்சன், கோழிக்கோடு நாராயணன் நாயர், பி. ஸ்ரீகுமார், ஷோபா மோகன், அனீஷ் ஜி.மேனன், பிரதீப் சந்திரன், ஆண்டனி பெரும்பாவூர், கூட்டிக்கல் ஜெயச்சந்திரன், கலாபவன் ஹனீப், கலாபவன் ரஹ்மான், பாலாஜி சர்மா, சோனி சாலமன், பைஜு வி. கே., நிஷா சாரங், மேல ரகு, அருண் பனக்கல், ஜீத்து ஜோசப் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆண்டனி பெரம்பவூர் தயாரித்துள்ளார். முதல் பாகம் வெற்றியடைந்தது தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பூஜையுடன் தொடங்கியது த்ரிஷ்யம் 3 படம்:
இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தள பக்கத்தில் ரகசியங்கள் ஒருபோதும் அமைதியாக இருக்காது என்று த்ரிஷ்யம் 3 படம் தொடங்க உள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று 22-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு த்ரிஷ்யம் 3 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விபத்தில் சிக்கிய பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் – என்ன நடந்தது?
நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Bringing Georgekutty’s world alive once again…
Today marks the beginning of Drishyam 3 with the Pooja.#Drishyam3 #JeethuJoseph #AashirvadCinemas #Drishyam pic.twitter.com/olQYQZR1WF— Mohanlal (@Mohanlal) September 22, 2025
Also Read… ரியோவின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பரான அப்டேட்டை கொடுத்த படக்குழு