தணிக்கைச் சான்றிதழ் விவகாரம்… ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன – வைரலாகும் தகவல்
Jana Nayagan Movie Censor Issue: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டிருக்க காரணம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்ச்னை தான். இந்த பிரச்சனைக்கு ஜன நாயகன் படக்குழு என்ன முடுவு எடுக்க உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69-வது படத்திற்காக இயக்குநர் எச். வினோத் உடன் கூட்டணி வைத்தார். இந்த கூட்டணி அறிவிப்பு வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் தயாரித்து உள்ள நிலையில் இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக சென்சார் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
சென்சார் குறித்து ஜன நாயகன் படக்குழு எடுக்கப்போகும் முடிவு என்ன?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, மறுஆய்வுக் குழுவை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மறுஆய்வுக் குழுவை அணுகுவதா அல்லது தனி நீதிபதி முன்பு வழக்கைத் தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவு நாளை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 9-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 5-ம் தேதி இரவு, படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப் பரிந்துரைக்கப்போவதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது.
Also Read… வா வாத்தியார் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்
படம் வெளியாக மூன்று நாட்களே இருந்த நிலையில், முதலில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்படும் என்று வாரியம் குறிப்பிட்டிருந்தாலும், கடைசி நேரத்தில் அதை மறுத்துவிட்டது. படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினால் குறைந்தது 10 நாட்கள் ஆகும் என்பதாலும், பொங்கல் பண்டிகையின்போது படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்படும் என்பதாலும், தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இருப்பினும், எந்தவித நிவாரணமும் கிடைக்காததால், இந்த வழக்கு தற்போது தனி நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியவில்லை. எனவே, தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து பரிசீலித்து வருகிறது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.