இன்று மாலை வெளியாகிறது இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள்

Irandu Vaanam Movie First Single Release Today: நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாகவும் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலை வெளியாகிறது இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள்

இரண்டு வானம்

Published: 

25 Apr 2026 11:03 AM

 IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடிப்பது மட்டும் இன்றி படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து உள்ளார். நடிகை மமிதா பைஜூ நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்க வேண்டிய முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில காரணங்களால் படம் முன்பு வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு வானம் படத்தை இயக்குநர் ராம்குமார் எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் ஃபேண்டசசி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இன்று மாலை வெளியாகிறது இரண்டு வானம் படத்தின் முதல் சிங்கிள்:

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த இரண்டு வானம் படத்தில் இருந்து இன்று 25-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு வெள்ளிச்சுடரே என்ற முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்தப் பாடலின் புரோ வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நடிகர் தனுஷிற்காக கதை எழுதும் கப்புள் ஃப்ரண்ட்லி பட இயக்குநர்

இரண்டு வானம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பான் இந்திய பேமஸ்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுதா?

Follow Us
ஈரானின் நடவடிக்கையால் உலக அளவில் இண்டர்நெட் சேவை பாதிப்பு? அதிர்ச்சி தகவல்
எறும்புகளை துன்புறுத்தும் சர்ச்சை வீடியோ - நெட்டிசன்கள் எதிர்ப்பு
வங்கியின் அலட்சியத்தால் வாடிக்கையாளருக்கு ரூ. 3.21 லட்சம் இழப்பீடு
உலகின் வெப்பமான நகரங்களின் பட்டியிலில் இந்தியாவின் 19 நகரங்கள்