பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி ரிலீஸை லாக் செய்தது படக்குழு – அப்டேட் இதோ

Love Insurance Kompany Movie OTT Release Update Here: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி ரிலீஸை லாக் செய்தது படக்குழு - அப்டேட் இதோ

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

Published: 

01 May 2026 17:10 PM

 IST

தமிழ் சினிமாவில் இந்தப் படம் ரிலீஸாகுமா ஆகாதா என்று பல கேள்விகளுக்கு இடையே திரையரங்குகளில் வெளியான படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. ஒவ்வொரு முறை இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பிறகு படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பதாக தொடர்ந்து படக்குழு அறிவித்து வந்தது. இதன் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டும் ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில் ஒரு வழியாக கடந்த 10-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இருந்தார். இவர் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். அதன்படி நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமன், யோகி பாபு, ஷா ரா, கௌரி ஜி கிஷன், ஆனந்த் ராஜ், நிஃப்யா ரசூல், சுனில், விடிவி கணேஷ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்தப் படமும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 100 கோடி வசூலித்த படமாக மாற்ற வேண்டும் என்று படக்குழு மிகவும் முயற்சி செய்தது. ஆனால் இந்தப் படம் 100 கோடி வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Vetrimaaran: அரசனும், அன்பும் சந்திப்பார்களா? வெற்றிமாறன் கொடுத்த சுவாரஸ்ய பதில்!

அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித் குமார் பர்த்டே ஸ்பெஷல்… தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸான படங்களின் லிஸ்ட் இதோ

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..