Jana Nayagan: ‘தங்கமே தளபதி.. பிளாஸ்ட்டு’.. பிளாஸ்ட்டு… ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!

Thalapathy Kacheri Song: தளபதி விஜய்யின் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனிருத்தின் இசையமைப்பில், தளபதி கச்சேரி என்ற முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

Jana Nayagan: தங்கமே தளபதி.. பிளாஸ்ட்டு.. பிளாஸ்ட்டு... ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது!

ஜன நாயகன் பட முதல் பாடல்

Updated On: 

08 Nov 2025 18:17 PM

 IST

இந்திய அளவில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இறுதியாக தி கோட் (The GOAT) என்ற திரைப்படமானது வெளியானது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக தளபதி விஜய் ஒப்பந்தமான திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், ஆரம்பத்தி இப்படமானது தளபதி69 என அழைக்கப்பட்டுவந்தது. பின் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய்யின் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H.Vinoth) இயக்க்கியுள்ளார். இந்த படம் தான் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார்.

இவர்கள் ஜோடி ஏற்கனவே பீஸ்ட் என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் திரைப்படத்தை கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துவருகிறார். இவரின் இசையமைப்பில் ஜன நாயகன் படத்தில் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. “தளபதி கச்சேரி” (Thalapathy Kacheri) என்ற முதல் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் தீயாக வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் டிசி படம்.. சிறப்பு வேடத்தில் லப்பர் பந்து பட நடிகை?

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட விஜய்யின் தளபதி கச்சேரி பாடல் பதிவு :

தளபதி கச்சேரி பாடலின் சிறப்புகள்

இந்த தளபதி கச்சேரி பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க , விஜய் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதியிருக்கிறார். இப்பாடலில் விஜய், அனிருத் மற்றும் ராப் பாடகர் அசல் கோளாறு போன்றவர்கள் இணைந்து பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் சேகர் மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட்.. வெற்றியைக் கொண்டாடிய காந்தாரா சாப்டர் 1 படக்குழு!

இவர் குங்ஃபூ குமாரி, ராமுலோ ராமுலோ, சாமி சாமி மற்றும் ராவடி போன்ற தெலுங்கு பாடல்களுக்கு கோரியோகிராப் செய்திருக்கிறார். இந்த பாடல்களை அடுத்ததாக தற்போது தளபதி விஜயின் ஜன நாயகன் பட தளபதி கச்சேரி பாடலுக்கும் நடனம் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு

இப்படத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 1ம் தேதியில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.