Jana Nayagan: தளபதி விஜய்யின் லாஸ்ட் ரோர்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்..

Jana Nayagan Trailer: கோலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர்தான் தளபதி விஜய். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. அதை முன்னிட்டு இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jana Nayagan: தளபதி விஜய்யின் லாஸ்ட் ரோர்.. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியானது  ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்..

ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லர்

Updated On: 

03 Jan 2026 19:10 PM

 IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju), பாபி தியோல் (Bobby Deol), நரேன், பிரியாமணி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்திருக்கும் நிலையில், இப்படத்திலிருந்து இதுவரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பின்னணி இசையிலும் அனிருத் சிறப்பான சம்பவம் செய்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் தரமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படமானது வரும் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதை முன்னிட்டு இன்று 2026 ஜனவரி 3ம் தேதி இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுதான் தளபதி விஜய்யின் கடைசி ட்ரெய்லர் என கூறப்படும் நிலையில், வெளியான சில நிமிடங்களிலே மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிவின் பாலிக்கு ஜோடியாக இணையும் மமிதா பைஜூ.. எந்த திரைப்படத்தில் தெரியுமா?

தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த ஜன நாயகன் ட்ரெய்லரில் முழுவதும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகள் அதிகம் உள்ளது. மேலும் இதில் மமிதா பைஜூ, விஜய் மற்றும் பாபி தியோலுக்கு இடையே இருக்கும் பிரச்னைதான் மைய கதையாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பகவத் கேசரி படத்திலிருந்து சில காட்சிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது விஜய்யின் கடைசி பட ட்ரெய்லர் என்ற நிலையில், மக்களிடையே எமோஷனலான கருத்துக்களையும் பெற்றுவருகிறது.

ஜன நாயகன் படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் எப்போது :

இந்த ஜன நாயகன் படம் 2026 ஜனவரி 9ம் தேதி முதல் வெளியாகவுள்ள நிலையில், நாளை 2026 ஜனவரி 4ம் தேதி முதல் இப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், தொடர் விடுமுறைகளில் மக்களிடையே மிக பிரம்மாண்ட வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘ராவண மவன்டா’.. ரசிகர்கள் கொண்டாடும் ஜன நாயகன் பட 4வது பாடல் வெளியானது!

விஜய் நடிப்பில் வெளியான படங்களில் இருந்து இப்படத்திற்கு அதிக வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படமானது வெளிநாடு ப்ரீ புக்கிங்கில் UK-வில் மட்டும் இதுவரை 45,000 டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் தளபதி விஜய்யின் படத்திற்கு இது மிக பிரம்மாண்ட ஓப்பனிங் என்பது உண்மையே.

ஷாருக்கான் நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்.. அதிர்ச்சி கிளப்பும் இந்து அமைப்புகள்
இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட 'சுனாமி ரெடி' கிராமங்கள்
தேவையில்லாத பொருட்களை வாங்குகிறீர்களா? மனநலப் பிரச்னையாக மாறும் ஆபத்து
கோஹினூர் வைரம் அணிவது துரதிர்ஷ்டமா? இதுதான் உண்மையான வரலாறு