Heartin: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

Heartin Movie Teaser: தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது திரைப்படங்கள் வெளியாகிவரும் நிலையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா சினிமாவில் களமிறங்கியுள்ளார். அவர் நடித்திருக்கும் புது திரைப்படம்தான் ஹார்ட்டின். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Heartin: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

ஹார்ட்டின் திரைப்பட டீசர்

Updated On: 

12 Mar 2026 22:19 PM

 IST

மலையாள சினிமாவின் மூலம் மக்க மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மடோனா செபஸ்டியன் (Madonna Sebastian). இவர் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான பிரேமம் (Premam) என்ற படத்தின் நடிகையாக நடித்து பிரபலமானார். இந்த படத்தை அடுத்தாக தமிழ் சினிமாவிலும் இவர் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். கடந்த 2016ம் ஆண்டில் வெளியான விஜய் சேதுபதியின், “காதலும் கடந்துபோகும்” என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நுழைந்தார் இவர். இதையடுத்து தமிழிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்தார். மேலும் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) லியோ (Leo) படத்திலும் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் கிஷோர் குமாரின் (Kishore Kumar) இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் படம்தான் ஹார்ட்டின் (Heartin).

இந்த படத்தில் நடிகர் சனந்த் ரெட்டி (Sananth Reddy), மடோனா செபஸ்டியன் மற்றும் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் (Thangam thennarasu) இமயாவும் (Imaya) இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், தற்போது இதன் டீசர் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் முதல் பாடல்.. படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!

மடோனா செபஸ்டியன், சனந்த் ரெட்டி மற்றும் இமயா நடித்த ஹார்ட்டின் பட டீசர் பதிவு:

இந்த ஹார்ட்டின் திரைப்படத்தில் நடிகர் சனந்த் ரெட்டி, மடோனா செபஸ்டியன் மற்றும் இமயா மூவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ளது. முன்னாள் காதலன் தற்போது மற்றோர் காதலியுடன் இருப்பதை மையமாக வைத்தும், இவர்கள் மூவரின் காதலுக்குள் எவ்வாறு பிரச்னை வருகிறது என்பதை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: கொரியாவிற்கு அழைத்து சென்றாரா பிரியங்கா மோகன்.. மேட் இன் கொரியா படம் எப்படி இருக்கிறது? – விமர்சனங்கள் இதோ!

இப்படத்தை கிஷோர் குமார் இயக்க, ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளாராம். இன்னும் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
மாணவர்கள் செய்த 'பிராங்க்'.. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆசிரியர் உயிரிழப்பு!
மினாப் பள்ளி தாக்குதல்: அமெரிக்கா மீது சந்தேகம்
மும்பையில் எரிவாயு தட்டுப்பாடு..20% உணவகங்கள் மூடல்..
துபாயில் தவிக்கும் இந்தியர்கள்.. தனது 64 அடுக்குமாடி குடியிருப்புகளை கொடுத்து உதவிய இந்தியத் தொழிலதிபர்..