ரெட்டை கதிரே… சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

13 Years Of Maattrraan Movie: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் முன்னதாக வெளியான மாற்றான் படம் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ரெட்டை கதிரே... சூர்யாவின் மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

மாற்றான்

Published: 

12 Oct 2025 19:24 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Actor Suriya) நடிப்பில் கடந்த 12-ம் தேதி அக்டோபர் மாதம் 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மாற்றான். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் என்று இரட்டைப் பிறவிகளை கூறுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டை சகதோரராகவே நடித்து இருந்தார். இந்தப் படத்தை தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் இருந்த கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் தான் மாற்றான். இந்தப் படத்தின் கதையை அவரே எழுதி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் காஜல் அகர்வால், சச்சின் கெடேகர், தாரா, இரினா மாலேவா, ஜூலியா ப்ளீஸ், ரவி பிரகாஷ், சங்கர் கிருஷ்ணமூர்த்தி, அஜய் ரத்னம், சென்ட்ராயன், விவேக், நிவின், கிருஷ்ணமூர்த்தி, குமார் நடராஜன், இஷா ஷர்வானி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் படம் இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது:

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதராக நடித்து இருந்த நடிகர் சூர்யாவில் ஒருவர் மிகவும் மார்டனாகவும் மற்றொருவம் மிகவும் மக்கள் நலன் கொண்டவராகவும் இருக்கிறார். இதில் மக்கள் நலன் எண்ணம் கொண்டவராக இருக்கும் சூர்யா தனது தந்தை செய்யும் தொழிலில் என்ன தவறு எல்லாம் செய்கிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

இதனை அவரின் தந்தை அறிந்துகொண்டு பெற்ற மகன் என்று கூட பார்க்காகம் அவரை கொலை செய்கிறார். இதன் காரணமாக மிகவும் மார்டனாக இருந்த சூர்யா உயிரிழந்த சூர்யாவின் குண நலனுடன் மாறுகிறார். அதனைத் தொடர்ந்து தனது சகோதரனை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். இறுதியாக என்ன நடந்தது அவர் தந்தையை அவர் பழி வாங்கினாரா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷன் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த தகவல்

மாற்றான் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பைசன் படத்தை தொடர்ந்து அடுத்தது அந்த நடிகரின் படம் தான் – மாரி செல்வராஜ் ஓபன் டாக்