தியேட்டர் ரிலீஸிற்கு பிறகு கருப்பு படத்தை எந்த டிவி சேனலில் பார்க்கலாம் தெரியுமா? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Karuppu movie satellite rights update: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த படம் கருப்பு. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த தொலைக்காட்சி நிறுவனம் பெற்றது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

கருப்பு
தமிழ் சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் பிரபலங்கள் கொண்டாடும் ஒரு நடிகராகவும் நடிகர் சூர்யா வலம் வருகிறார். அதன்படி இவரது நடிப்பு குறித்து பல திரையுலக பிரபலங்கள் குறிப்பாக மற்ற மொழி திரைப் பிரபலங்களும் அதிக அளவில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி எந்தவித போட்டியும் இல்லாமல் மற்ற திரையுலக பிரபலங்களால் மனதாரப் பாராட்டப்படும் சூர்யாவின் நடிப்பில் படம் திரையரங்குகளில் வெளியாகி பல மாதங்கள் கடந்தது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பல மாதங்களாக சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை எந்த டிவி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறித்து தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜீ தமிழ் நிறுவனம்:
அதன்படி திரையரங்குகள் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக கருப்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கருப்பு படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
Also Read… Selvaraghavan: புதுப்பேட்டை 2 ஸ்கிரிப்ட் ஓவர்.. அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The signal gets stronger now – #Karuppu satellite rights with @ZeeTamil!✨
In theatres – May 14th, 2026.💫
A @SaiAbhyankkar Musical 🎶@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl #SupreethReddy #AnaghaMayaRavi… pic.twitter.com/jdUqYgZrqK
— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 22, 2026
Also Read… இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!