சூர்யா46 பட ஷூட்டிங் இன்னும் முடியவில்லையா? ரசிகர்களிடையே வைரலாகும் மமிதா பைஜூவின் புகைப்படம்!
Suriya46 Shooting Update : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் கூட்டணியில் தயாராகிவரும் படம்தான் சூர்யா46. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக இணையத்தில் தகவல்கள் பரவிவந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

மமிதா பைஜு மற்றும் சூர்யா
தெலுங்கு பிரபல இயக்குநராக இருப்பவர் வெங்கி அட்லூரி (Venky Atluri). இவரின் இயக்கத்தில் தமிழ் கதாநாயகனாக நடிகர் சூர்யா ஒப்பந்தமான திரைப்படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 மே மாதத்தின் இறுதி முதல் ஆரம்பமான நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவந்தது. அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தமிழகத்தில் உள்ள ஊட்டி பகுதியில் கடந்த 2025 டிசம்பர் மதத்தின் தொடக்கத்தில் மிக பிரம்மாண்டமாகவே நடந்து வந்தது. அதனை அடுத்து இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக வட்டாரங்களில் கூறப்பட்டுவந்தது. அந்த வகையில் இப்படத்தின் மீதமுள்ள காட்சிகள் சில தற்போது ஊட்டி பகுதியில் படமாக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மமிதா பைஜூவின் (Mamitha Baiju) புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லையா? என கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: எல்லா பிரச்னையும் ஓவர்… தொடங்கியது வா வாத்தியார் படத்தின் டிக்கெட் புக்கிங் – வைரலாகும் அப்டேட்
சூர்யா46 படத்தின் ஷூட்டிங் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :
The shooting of #SURIYA46 is going on in Ooty. #MamithaBaiju has joined the shoot…….💥#Karuppu pic.twitter.com/AYkDzvcAI3
— Movie Tamil (@_MovieTamil) January 13, 2026
சூர்யா46 திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது :
இந்த சூர்யா46 படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகர்கள் மமிதா பைஜி, ரவீனா டான்டன் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது 45 வயது ஆணுக்கும் 22 வயது பெண்ணுக்கும் இடையே எவ்வாறு காதல் மலர்கிறது மற்றும் அவர்கள் இருவரும் இறுதியில் திருமணம் செய்தார்களா? அல்லது இல்லையா? என்பதே இப்படத்தின் மைய கதையாகும். இந்த படத்தய் சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்துவருகிறார். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கானது இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பாராது வருகின்றனர்.
இதையும் படிங்க: பிக்பாஸில் விக்ரமை தவிர்க்கும் முன்னாள் போட்டியாளர்கள்… சோகத்தில் விக்ரம்
இந்த படத்தின் முதல் பார்வையும் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்துவருகின்றனர். அதன்படி இப்படம் 2026 மே மாதத்தின் தொடக்கத்தில் வெளியாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் ரிலீஸ் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படத்தை அடுத்ததாக நடிகர் சூர்யா மலையாள இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.