Karuppu: 2026 தேர்தல் தேதி அறிவிப்பு.. சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி உறுதி?

Karuppu Release Date Update: சூர்யா நடிப்பில் தொடர்ந்து புது படம் உருவாகிவரும் நிலையில், இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் கருப்பு. இன்று (15/03/2026) தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கருப்பு பட ரிலீஸ் தேதி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

Karuppu: 2026 தேர்தல் தேதி அறிவிப்பு.. சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி உறுதி?

கருப்பு திரைப்படம்

Updated On: 

15 Mar 2026 18:50 PM

 IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) படம் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இது கிட்டத்தட்ட ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்துவந்த படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (Karuppu) இயக்கியுள்ள நிலையில், இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். சூர்யா மற்றும் திரிஷா கூட்டணி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் கருப்பு படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தே கிட்டத்தட்ட 10 மதங்களுக்கும் மேலான நிலையில், இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை.

2026ம் ஆண்டு தேர்தல் எப்போது என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியில் தமிழகத்தில் தேர்தல் நடக்கவுள்ளதாம். மேலும் இதன் வாக்கு எண்ணிக்கை வரும் 2026 மே 4ம் தேதியில் நடக்கிறதாம். இந்த நிலையில், தற்போது கருப்பு படம் எப்போது ரீலிஸாக அதிக வாய்ப்புகள் என்பது குறித்து தகவல் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கல்யாணி சினிமாவிற்கு வந்தது இப்படிதான்.. ஒரு அப்பாவாக பெருமையாக இருக்கு – பிரியதர்ஷன்!

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

அந்த பதிவில் நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் வரும் 2026 மே 15ம் தேதியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. தற்போது தேர்தல் தேதியுடன் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் நிலை என்ன:

நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் தயாராகியுள்ள கருப்பு படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் ஏற்கனவே ஒரு பாடல் வெளியான நிலையில், 2வது பாடல் ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. இதை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், 2025ம் ஆண்டு மே மதத்திற்கும் முன்னே நிறைவடைந்துவிட்டது.

இதையும் படிங்க: பவன் கல்யாணின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான உஸ்தாத் பகத் சிங் பட ட்ரெய்லர் – கொண்டாடும் ரசிகர்கள்

இப்பட ஷூட்டிங் முடிந்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கடக்கவுள்ளது. சில பிரச்சனைகளின் காரணமாக ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்படவில்லை. அந்த விதத்தில் 2026ம் ஆண்டு தேர்தல் எப்போது என்று எதிர்பாராத நிலையில், 2026 ஏப்ரல் 23ம் தேதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்துதான் கருப்பு படம் வெளியாகும் என்ற நிலையில், 2026 மே 15ம் தேதியில் வெளியாகி அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்