இணையத்தில் வைரலாகும் சூர்யா – நஸ்ரியாவின் கியூட் வீடியோ
Suriya and Nazriya's recent video: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது பட நடிகை நஸ்ரியா இருவரும் சமீபத்தில் பட விழாவில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா - நஸ்ரியா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டும் மே மாதம் படம் திரையரங்கில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு மேலாக சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி உள்ள கருப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில் அந்தப் படம் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் அடுத்தடுத்தப் படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த கருப்பு படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் 46-வது படமாக உருவாகி உள்ளது விஸ்வநாத் & சன்ஸ் படம். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது சூர்யா ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் சூர்யா – நஸ்ரியாவின் கியூட் வீடியோ:
இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 47-வது படத்திற்காக மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா மற்றும் நஸ்லேன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.
இந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் மனைவி ஷிஃபினா பாபின் பாக்கர் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் நடைப்பெற்றது. இந்த பட விழாவில் நடிகர்கள் சூர்யா – நஸ்ரியா உட்பட சூர்யா 47 படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் சூர்யா – நஸ்ரியாவின் கியூட் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Thats so cute🥰😀#Suriya – #Nazriya recent ❤️pic.twitter.com/gTyZEdw6wr
— AmuthaBharathi (@CinemaWithAB) April 6, 2026
Also Read… கணவருடன் பிரச்சனை… தற்கொலை செய்துகொண்ட கயல் சீரியல் நடிகை – சோகத்தில் ரசிகர்கள்