சூர்யா46 படத்தின் ஊட்டி ஷெட்யூல் முடிந்தது.. ரசிகர்களிடையே வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Suriya46 Movie Ooty Shooting: நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் சூர்யா 46. இந்த படத்தின் 2ம் கட்ட இறுதி ஷூட்டிங் சமீபகாலமாக ஊட்டியில் நடைபெற்று வந்திருந்தது. இந்நிலையில் தற்போது ஊட்டியில் நடைபெற்ற இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சூர்யா46 படத்தின் ஊட்டி ஷெட்யூல் முடிந்தது.. ரசிகர்களிடையே வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

சூர்யா46 படத்தின் ஷூட்டிங்

Published: 

03 Dec 2025 18:00 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பும் நடிகராக இருக்கக்கூடியவர்தான் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் வாத்தி (Vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநருடன் சூர்யா இணைந்த படம்தான் சூர்யா46 (Suriya46). இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, சித்தாரா என்டர்டைன்மென்ட் (Sithara Entertainment) என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இதில் சூர்யாவுடன் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் மே மதத்தின் இறுதியில் பூஜைகளுடன் தொடங்கிய நிலையில், ஹைதராபாத், இத்தாலி போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. மேலும் சமீபகாலமாக தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் (Ooty) இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 3ம் தேதியுடன் அங்கே நடைபெற்ற ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளதாம். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி படக்குழு தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

சூர்யா46 திரைப்படத்தின் ஊட்டி ஷூட்டிங் தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு :

சூர்யா46 திரைப்படத்தில் இணைந்த தமிழ் நடிகர்கள்:

நடிகர் சூர்யாவின் 46வது படத்தில் ஏற்கனவே அவருடன் நடிகர்கள் மமிதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதாகிக்கா சரத்குமார் மற்றும் பவானி ஸ்ரீ போன்ற நடிகர்கள் நடித்துவந்தநர். இந்நிலையில் மேலும் நடிகர்கள் நாசர், மீரா கிருஷ்ணன் மற்றும் மேத்தீவ் வர்கீஸ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த சூர்யா46 திரைப்படமானது முழுக்க பேமிலி என்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாகிவருகிறதாம்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஓவர்.. நியூ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படக்குழு!

கிட்டத்தட்ட அல்லு அர்ஜுனின் வைகுண்டபுரம் படத்தை போல இந்த படமும் உருவாகிவருவதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக இந்த 2025ம் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்துவிடும் நிலையில், இதை அடுத்து சூர்யா, மலையாள இயக்குநரான ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 படத்தில் இணையவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சூர்யா46 படத்தை வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார். சூர்யாவின் கருப்பு படம் மற்றும் சூர்யா46 படம் இரண்டும் ஒன்றின்பின் ஒன்றாக தொடர்ந்து வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!