Suriya: மீண்டும் இணைகிறதா சூர்யா – அமீர் கூட்டணி? – வைரலாகும் தகவல்!
Suriya And Ameer Reunion: தென்னிந்திய மொழி சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் ஏற்கனவே இயக்குநர் அமீரின் இயக்கத்தில் மௌனம் பேசியதே என்ற படத்தில் நடித்த நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா மற்றும் அமீர்
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் தற்போது மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இவர் தொடர்ந்து புது திரைப்படங்களுக்கான கதைகளையும் கேட்டுவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ (Retro) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இப்படம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக கருப்பு (Karuppu) மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) போன்ற படங்களில் ஒப்பந்தமானார். இந்த படங்களின் ஷூட்டிங் எல்லாம் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இதில் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம்தான் முதலில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த படங்களின் வரிசையில் நடிகர் சூர்யா, அமீர் (Ameer) இயக்கத்தில் புது படத்தில் ஒப்பந்தமாகவுள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. இதை மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe) படத்தை தயாரித்திருந்த நிறுவனமே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரத்து? – படத்தின் நிலைமை இதுதான்!
சூர்யாவுடன் மீண்டும் கைகோர்க்கும் அமீர்:
நடிகர் சூர்யா மற்றும் அமீர் கூட்டணியில் வெளியான படம்தான் மௌனம் பேசியதே. கடந்த 2002ம் ஆண்டில் வெளியான இப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த 2026ம் ஆனது பிப்ரவரி மாதத்தில் இப்படமானது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இப்படத்தின் ரீ-ரிலீஸின்போது சந்தித்த சூர்யா, அமீர் மற்றும் தயாரிப்பாளர் மீண்டும் கூட்டணி அமைக்கவேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.
இதையும் படிங்க: ஆர்த்தி இல்லாமல் என்னால் எதுவுமே பண்ணிருக்க முடியாது – மனைவியை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்!
அபராஜீத் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் சூர்யா புது படத்தில் இணைய வாய்புள்ளதாம். இப்படத்தை இயக்குநர் அமீர் இயக்குவதற்காக பேசப்பட்டுவருகிறார் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
சூர்யா மற்றும் இயக்குநர் அமீர் கூட்டணி குறித்து வைரலாகும் பதிவு:
#Suriya likely to do a film with Aparajeeth Films (Producer of MounamPesiyadhe)🎬
Director #Ameer is in consideration to Direct the film !!
Recently during Mounam Pesiyadhe Re-release the trio has met & discussed about the project 🤝
©️VP pic.twitter.com/0ubx6s2o7S— AmuthaBharathi (@CinemaWithAB) March 11, 2026
நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இது தமிழ் மற்றும் மலையாளம் மொழியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் நிலையில், நஸ்ரியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், மேலும் புது படங்களுக்காகவும் சூர்யா கதை கேட்டுவருவதாக கூறப்படுகிறது.