ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகின்ற டிசம்பர் மாதம் வர உள்ள நிலையில் அவரது நடிப்பில் 33 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியான சூப்பர் ஹிட் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

ரஜினிகாந்த்

Published: 

05 Jun 2025 12:30 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கும் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). சினிமாவில் 50 வருடங்கள் கடந்த பிறகும் இளைய தலைமுறை நடிகர்களை விட மிகவும் வேகமாக பணியாற்றி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து ஓய்வே இல்லாமல் படங்களில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதில் உருதியாக உள்ளார். அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் வேட்டையன். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி ஆகும்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸாகும் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படம் அண்ணாமலை:

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அண்ணாமலை. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர்கள் குஷ்பு, சரத் பாபு, ராதா ரவி, நிழல்கள் ரவி மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல அண்ணாமலை படத்தில் வரும் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்த நாள் வருகின்ற டிசம்பர் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்த நாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக அண்ணாமலை படத்தை 4கே தரத்தில் தமிழ்கம் மற்றும் கேரள மாநிலத்தில் டிசம்பர் 12-ம் தேதி ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் ரஜினிகாந்த்:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படம் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் பணிகள் தமிழக எல்லைகள் மற்றும் கேரளாவில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
Sigma Movie: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
முடிஞ்சா மிதி.. வித்தியாசமாக நடந்த பிக் பாஸ் வீட்டு தல டாஸ்க்.. FJ – விக்ரம் இடையே மோதல்… வைரலாகும் புரோமோ
Atlee: தெறி படத்தில் நைனிகாவை நடிக்கவைக்க மீனா மேம் ஒத்துக்கல – அட்லீ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
வீக்கெண்டில் வீட்லேயே ஜாலியா ஒரு படம் பார்க்கனுமா? இந்த நெய்மர் படத்தை மிஸ் செய்யாமல் பாருங்க
உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?