ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி… அப்டேட் இதோ

Tourist Family Movie OTT Release: அறிமுக இயக்குநர் இயக்கத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படம் ஹார்ஸ் ஸ்டார் ஓடிடியில் ஜூன் மாதம் வெளியாக உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ

டூரிஸ்ட் ஃபேமிலி

Updated On: 

28 May 2025 20:46 PM

 IST

தமிழ் சினிமாவில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி (Tourist Family). கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக வறுமையில் இருக்கும் குடும்பம் இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்கு கடல் வழியாக வருகிறார்கள். ராமேஸ்வரம் வந்தடையும் அவர்கள் சென்னையில் குடும்பமாக தங்களது வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அவர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்களுடன் அவர்கள் பழகும் விதம் அங்கு இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஃபீல் குட் படமாக அமைந்தது. இந்தப் படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் கொண்டாடித் தீர்த்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை இந்தப் படத்தை வெகுவாகப் பாராட்டினர்.

இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். மேலும் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்தார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான அயோத்தி படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் அந்தப் படத்தை விட இது இன்னும் அதிக வெற்றியை சசிகுமாருக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கொண்டாடும் டூரிஸ்ட் ஃபேமிலி படம்:

மேலும் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், ரமேஷ் திலம், காமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தயாரித்துள்ளது. ஃபீல் குட் படங்களை தயாரிப்பதில் தமிழ் சினிமாவில் முன்னணி வகிக்கும் இந்த நிறுவனம் தற்போது மற்றும் ஒரு ஃபீல் குட் படத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று முன்னதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது படம் வருகின்ற ஜூன் மாதம் 2-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories
Sirai Movie: மிகவும் உண்மையானதாகவும் அசலாகவும் உணர்ந்தேன்.. சிறை படத்திற்கு விமர்சனம் கொடுத்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து!
அஜித் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் ரீ-ரிலீஸாகும் மங்காத்தா.. வைரலாகும் பதிவு!
உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2026ல் எதிர்பார்ப்புகளுடன் வெளியாக காத்திருக்கும் தமிழ் நடிகர்களின் படங்கள்?
2025-ம் ஆண்டில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த தென்னிந்திய மொழிப் படங்கள்
Radhika Apte: ஷூட்டிங் தளத்தில் நான் மட்டும்தான் பெண்.. என்னிடம் அதை செய்த சொன்னது மிகவும் அசௌகரியமாக இருந்தது- ராதிகா ஆப்தே ஓபன் டாக்!
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்
வருடத்திற்கு 6 முதல் 12 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்களா?
ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் தகுதிப்பெற்ற இந்தியத் திரைப்படம்!!
உலக அளவில் 100 சிறந்த இனிப்புகளில் இடம்பெற்ற 2 இந்திய இனிப்புகள் - எது தெரியுமா?