Annam Serial: முதலமைச்சராக பதவியேற்ற விஜய்.. கொண்டாடி தீர்த்த சன் டிவி சீரியல் நடிகர்கள்!
Annam Serial Actors Celebration: தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து, தற்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்றிருப்பவர் ச. ஜோசப் விஜய். இவரின் பதவியேற்பு விழா இன்று 2026 மே 10ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில், அதை நேரலையில் பார்த்து சன் டிவி அன்னம் சீரியல் நடிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

அன்னம் சீரியல் நடிகர்கள் கொண்டாட்டம்
கோலிவுட் சினிமாவின் நாயகனாக இருந்து, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதிவியேற்றிருப்பவர் தளபதி விஜய் (Thalapathy VIjay). இவர் நடந்துமுடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது (Tamilaga Vettri Kazhagam) அதிகம் வாக்குகளை பெற்று, தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தது. அந்த வகையில் இன்று 2026 மே 10ம் தேதியில், தளபதி விஜய் முதலமைச்சராக (Tamilnadu CM) பதவியேற்றுள்ளார். அந்த வகையில் அவருக்கு பல்வேறு நட்சத்திர நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பல பிரபலங்கள் வாழ்த்து கூறி எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் சன் டிவியில் (Sun TV) புகப்பெற்ற தொடரான அன்னம் சீரியல் நடிகர்கள் (Annam Serial), விஜய்யின் பதவியேற்பு விழாவில் ஷூட்டிங்கின்போது நேரலையில் கண்டு கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: மாதவன் முதல் பா.ரஞ்சித் வரை… தமிழக முதல்வராக பதவியேற்ற ச.ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த தமிழ் சினிமா பிரபலங்கள்!
விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவை நேரலையில் கன்னட அன்னம் சீரியல் நடிகர்கள் :
ஒட்டு மொத்தமாக கொண்டாடிய ‘சன் டிவி’ நடிகர்கள் ! 🔥😎#CMJosephVijay pic.twitter.com/Gzk2bftYgU
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 10, 2026
சன் தொலைக்காட்சியில் புகப்பெற்ற சீரியல்களில் ஒன்றாக இருந்துவருவது அன்னம். இந்த சீரியலானது தினமும் இரவு 7 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீரியலானது ஒரு பெண் தனது திறமையை வைத்து குடும்பத்தை எவ்வாறு நடத்துகிறார், அதில் அவர் சந்திக்கும் சிக்கல் போன்ற கதையில் ஒளிபரப்பப்பட்டுவருகிறது. அந்த வகையில் இந்த சீரியலில் அபி நட்க்ஷத்ரா, அஷ்வின் கார்த்திக் (Ashwin Karthik), பரத் குமார் (Barat Kumar) உள்ளிட்ட பலவேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள்.
இதையும் படிங்க: அவர் கொடுத்த முதல் வாய்ப்பு.. நான் சினிமாவில் இந்த நிலையில் இருக்க விஜய் அண்ணன்தான் காரணம் – நடிகர் ஜெய் பேச்சு!
இந்த சீரியலானது மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு சீரியலாக இருக்கும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கில் 6வது இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியல் நடிகர்கள் அஷ்வின் கார்த்திக் உட்பட இந்த சீரியல் பிரபலங்கள் அனைவரும், தளபதி விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நேரலையை ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்துள்ளனர். அந்த வகையில் மகிழ்ச்சியில் திளைத்த அவர்கள் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது தளபதி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது.