பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்காமல் விட்டதற்கு காரணம் இதுதான் – சுஜிதா சொன்ன விசயம்!

Pandian Stores 2: சின்னத்திரையில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மெகா ஹிட் சீரியல் மூலம் தமிழக மக்களிடையே நன்கு பரிச்சையமான நபர் நடிகை சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 சீரியலில் நடிக்காமல் விட்டதற்காகன் காரணத்தை வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்காமல் விட்டதற்கு காரணம் இதுதான் - சுஜிதா சொன்ன விசயம்!

சுஜிதா

Published: 

16 Sep 2025 20:38 PM

 IST

தமிழ் சினிமாவில் 1983-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை சுஜிதா (Actress Sujitha). குழந்தை நட்சத்திரமாகவே பலப் படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த 1983-ம் ஆண்டு இயக்குநர் பாக்கியராஜ் எழுதி இயக்கி நாயகனாக நடித்தப் படம் முந்தானை முடிச்சு. இதில் பாக்கியராஜின் குழந்தையாக நடிகை சுஜிதா நடித்து இருந்தார். அதில் ஆண் குழந்தையாக அவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படங்களில் முக்கிய வேடங்களில் நடிகை சுஜிதா நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக வாலி படத்தில் நடிகர் அஜித் குமாரின் தங்கையாக இவர் நடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படங்களில் நாயகியாக நடிக்கவில்லை என்றாலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நடிகை சுஜிதா சின்னத்திரையில் நாயகியாக பல சீரியல்களில் நடித்துள்ளார். அதன்படி 1998-ம் ஆண்டு முதல் சின்னத்திரையில் நாயகியாக நடித்து வரும் சுஜிதா தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல சீரியல்களிலு நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக நடிகை சுஜிதாவிற்கு அதிக புகழைப் பெற்றுத் தந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கு நோ சொன்ன சுஜிதா:

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்காததற்கான காரணத்தை நடிகை சுஜிதா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது முதல் பாகத்தில் அண்ணியாக நடித்த தான் 2-ம் பாகத்தில் அம்மாவாக நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது. ஏற்கனவே 5 ஆண்டுகளாக அந்த கதாப்பாத்திரத்தில் நடித்துவிட்டேன். சீரியல் குழுவும் எனக்காக கதையை மாத்துவதாகம் சீரியலின் பெயரை மாத்துவதாகவும் சொன்னார்கள். நான் எப்படி அந்த பெயரை மாற்றச் சொல்வேன் அது எனக்கு அடையாளம். எனக்கு அதில் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் நான் 2-ம் பாகத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டேன் என்று அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… கோவா படத்தில அந்த கதாப்பாத்திரம் ரொம்ப பிடிச்சு செஞ்சேன் – நடிகர் சம்பத் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

நடிகை சுஜிதாவின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… ரேவதினு கூப்பிடா திரும்பி கூட பாக்க மாட்டேன்… எனக்கு அந்த பேரே பிடிக்காது – நடிகை ஓபன் டாக்