Maareesan : வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ படக் கதை இதுவா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Fahadh Faasils Maareesan Movie : மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மாரீசன். இதில் நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் ஓபனாக கூறியுள்ளார். அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.

Maareesan : வடிவேலு - ஃபகத் பாசிலின் மாரீசன் படக் கதை இதுவா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

மாரீசன் திரைப்படம்

Published: 

12 Jul 2025 18:18 PM

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர பிரபலமாகவும், காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு (Vadivelu). இவரின் முன்னணி நடிப்பிலும், மலையாள நடிகர் ஃபகத் பாசிலின் Fahadh Fasil) முன்னணி நடிப்பிலும் உருவாகியிருக்கும் படம்தான் மாரீசன் (Maareesan). இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Shankar) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில், வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவரும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தைத் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பேனரின் கீழ் தயாரித்துள்ளார். இந்த படத்தின் முதல் அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு வெளியான நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்துவருகிறது. சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுதீஷ் சங்கர் கலந்து கொண்டார், அதில் அவர் இந்த மாரீசன் திரைப்படத்தின் கதைச் சுருக்கம் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க :  அவர் மருமகளா போக வேண்டியது.. இளையராஜாவை விமர்சித்த வனிதா!

மாரீசன் கதைக்களம் குறித்து இயக்குநர் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் சுதீஷ் சங்கர் மாரீசன் படம் பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர் ” இப்படத்தில் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு, அவர் மிகவும் பணக்காரர். மேலும் இதில் நடிகர் வடிவேலு ஏடிஎம்- யில் பணம் எடுக்கும்போது, அவரிடம் இருக்கும் பணத்தை, நடிகர் ஃபகத் பாசில் பார்த்துவிடுகிறார். பின் வடிவேலுவிடம் இருந்து அந்த பணத்தை எடுப்பதற்காக நடிகர் ஃபகத் பாசில், நடிகர் வடிவேலுவை பைக்கில் கூட்டி செல்கிறார்.

இதையும் படிங்க : முதல் மனைவியுடன் விவாகரத்துக்கு காரணம்.. மனம் திறந்து பேசிய விஷ்ணு விஷால்!

அவர் திருவண்ணாமலை முதல் கன்னியாகுமரி வரை பைக்கில் பயணம் செய்கின்றனர். மேலும் நடிகர் ஃபகத் பாசில்,  வடிவேலுவிடம் இருந்து பணத்தை எடுத்தாரா அல்லது இல்லையா என்பது தான் இப்படத்தின் மைய கதையாக இருக்கும் என இயக்குநர் சுதீஷ் சங்கர் பேசியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் கதை மீது உள்ள ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீஸை எண்ணி ரசிகர்களுக்குக் காத்திருக்கின்றனர்.

மாரீசன் படக்குழு வெளியிட்ட முதல் பாடல் பதிவு :

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து முதல் பாடலான FAFA சமீபத்தில் வெளியானது. மேலும் அதை தொடர்ந்து இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், ட்ரெய்லர் ரிலீஸ் குறித்தும் விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.