என் அழகான மனிதர் நடிகர் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – இயக்குநர் சுதா கொங்கரா

Actor Ravi Mohan Birthday: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் இன்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் நடிகர் ரவி மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என் அழகான மனிதர் நடிகர் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் - இயக்குநர் சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் ரவி மோகன்

Published: 

10 Sep 2025 12:33 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இன்று 10-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நடிகர் ரவி மோகன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் காதலிக்க நேரமில்லை. வித்யாசமான கதையை மையமாக வைத்து வெளியான இந்தப்  படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நான்குப் படங்களில் நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார். அதில் மூன்று படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஒரு படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பராசக்தி படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ரவி மோகனுக்கு அழகான பிறந்த நாள் வாழ்த்துகளை சொன்ன சுதா கொங்கரா:

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் ரவி மோகனுடனான புகைப்படத்தை பதிவிட்டு ஒரு அழகான பிறந்த நாள வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில் சுதா கொங்கரா கூறியதாவது, படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தைத் தேடுங்கள், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதைக் காண்பீர்கள்! என் அழகான ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!! பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்களுக்கு இனிய நேரங்கள் அமைய வாழ்த்துக்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

Also Read… Amaran : அமரன் படத்திற்கு குவியும் அவார்ட்ஸ்.. சைமா விருதுகளை வென்ற சாய் பல்லவி – சிவகார்த்திகேயன்!

இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்… உறுதி செய்த சிவகார்த்திகேயன்