இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வீடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா

Sudha Kongara: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர் என்று ஒரு கலக்கு கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர், அந்த வரிசையில் இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பிறந்த நாள் பதிவு வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு வீடியோ வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா

ஜி.வி.பிரகாஷ், சுதா கொங்கரா

Published: 

13 Jun 2025 21:06 PM

 IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் இன்று ஜூன் மாதம் 13-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அந்தப் பதிவில் இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளதாவது, ”எங்களுடைய முதல் கூட்டணியில் உருவான படத்தின் இசையமைப்பு நிகழ்வு இது. இந்தப் பணி அடுத்து… அடுத்து… அடுத்து… என்று தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ் குமார்” என்று இயக்குநர் சுதா கொங்கரா தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

சுதா கொங்கரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

பராசத்தி படத்திற்கு இசையமைக்கு ஜி.வி.பிரகாஷ் குமார்:

ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வந்தாலும் இசையமைக்கும் பணியை அவர் தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார். அந்த வகையில் அவர் முதன்முறையாக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தப் படம் சூரரைப் போற்று. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததுப் போல படத்தில் பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இவர்களது கூட்டணி பராசக்தி படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் அதர்வா, ரவி மோகன் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சூரரைப் போற்று படத்தைப் போல இந்தப் படத்திலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உடல் எடையை குறைக்க டயட் இருக்கீங்களா? எச்சரிக்கை உயிருக்கே ஆபத்தாக முடியலாம்
காற்று மாசு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள்.. ஷாக் ரிப்போர்ட்!
திடீரென ரத்தான திருமணம்.. மணமகள் சொன்ன காரணத்தால், உடைந்து போன மணமகன்..
இமயமலையில் கண்டெடுக்கப்பட்ட அணு ஆயுதம்.. பின்னணி என்ன?