ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்? வைரலாகும் தகவல்

Jailer 2 Movie Update: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கியது. இந்த நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் படத்தில் நடிகர்கள் தொடர்பான அப்டேட்களும் வைரலாகி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்திற்காக மோகன்லாலை சந்தித்த நெல்சன் திலீப்குமார்? வைரலாகும் தகவல்

மோகன்லால், நெல்சன் திலீப்குமார்

Published: 

07 May 2025 12:58 PM

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜெயிலர். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்தில் பான் இந்திய நடிகர்கள் மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து சுனில் மற்றும் இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் என பலர் இந்தப் படத்தில் கேமியோ வேடத்தில் நடித்திருந்தனர். படத்தில் சூப்பர் ஸ்டார் இருப்பதே மாஸாக இருந்த நிலையில் மற்ற மொழியில் உள்ள முன்னணி நடிகர்கள் நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தின் ஓய்வுபெற்ற ஜெயிலராக இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த நிலையில் இவர்களது மகனாக நடிகர் வசந்த் ரவி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வசந்த் ரவியை விநாயகன் கடத்தி கொலை செய்துவிட்டதாக ரஜினி நினைக்கிறார்.

ஆனால் விநாயகன் வசந்தை கொலை செய்யவில்லை என்றும் மகன் வேண்டும் என்றால் ஒரு கடத்தல் வேலையை செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு விநாயகன் சொல்கிறார். இந்த விசயத்தில் ரஜினி எப்படி செயல்பட்டார் என்பதே படத்தின் கதை. அனைத்து பிரச்சனைகளையும் முடித்துவிட்டு மகனை காப்பாற்றும் போது தான் மகனும் கெட்ட எண்ணம் உள்ளவர் என்பதை ரஜினி தெரிந்துகொள்கிறார்.

இறுதியில் மகனை கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தில் அந்தக் காட்சியை காட்டவில்லை. துப்பாக்கி சத்தம் மட்டுமே கேட்டது. படத்தின் முதல் பாக இறுதியிலேயே இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சியை வைத்தார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார்.

படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வீடியோ:

இந்த நிலையில் 2 வருடங்களுக்குப் பிறகு தற்போது இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அந்த அறிவிப்பு வீடியோ மாஸாக இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் முதல் பாகத்தில் இருந்த நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்கள்.

ஆனால் கேமியோ ரோலில் நடித்த நடிகர்கள் இருக்கிறார்களா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் முன்னதாக படத்தில் இருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்தார். பிறகு மோகன்லாலிடம் இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது தன்னிடம் படத்தில் நடிப்பது குறித்து யாரும் கேட்கவில்லை. கேட்டால் நிச்சயமாக நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது குறித்து மோகன்லாலிடம் பேச இயக்குநர் நெல்சன் திலீப் குமார் நேரில் சென்று பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.