ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர் – வைரலாகும் தகவல்
Jailer 2 Movie Update: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தில் பிரபல நடிகர்கள் பலர் நடித்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2
கோலிவுட் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் ரஜினிகாந்திற்கு 70 வயதைக் கடந்தாலும் தொடர்ந்து இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டார்.
இத்தனை வயதிலும் சற்றும் ஓய்வு இல்லாமல் தொடர்ந்து படங்களில் பிசியகா நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி முன்னதாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஜெயிலர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
ரஜினிகாந்திற்கு மீண்டும் வில்லனாகும் நடிகர் விஜய் சேதுபதி:
இந்த நிலையில் இந்தப் படத்தின் பான் இந்திய நடிகர்கள் பலர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. தற்போது சினிமா வட்டாரங்களில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக நடிகர் விஜய் சேதுபதி பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு வில்லனாக அவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… வெளியீட்டிற்கு 50 நாட்களே உள்ள பராசக்தி படம்… புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 – #VijaySethupathi onboard to play a pivotal role in the movie🌟
His portions are currently being shot in Goa🎬VijaySethupathi & Superstar #Rajinikanth combo after Petta🔥 pic.twitter.com/fm8ZCEGOfj
— AmuthaBharathi (@CinemaWithAB) November 26, 2025