தலைவர் 173 படத்தின் புரோமோ ஷூட் எப்போது? வைரலாகும் தகவல்

Thalaivar 173 Movie Promo Shoot Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தற்காலிகமாக தலைவர் 173 என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்க உள்ள நிலையில் படத்தின் புரோமோ ஷூட் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

தலைவர் 173 படத்தின் புரோமோ ஷூட் எப்போது? வைரலாகும் தகவல்

தலைவர் 173

Published: 

07 Apr 2026 15:14 PM

 IST

உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள சினிமா ரசிகர்கலால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட் விரைவில் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் அடுத்தடுத்து தலைவர் 173 மற்றும் KHxRK ஆகியப் படங்களில் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களில் தலைவர் 173 படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி எழுதி இயக்க உள்ள நிலையில் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் KHxRK படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்க உள்ளார். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.

தலைவர் 173 படத்தின் புரோமோ ஷூட் எப்போது?

‘தலைவர் 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 27-ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது; இதற்காக 3 நாட்கள் நீடிக்கும் ஒரு விளம்பரக் காட்சிப் படப்பிடிப்பு (Promo shoot) திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரப் படப்பிடிப்பு முடிந்ததும், வழக்கமான படப்பிடிப்பு தொடங்கும். இயக்குனர் சிபி இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த ஒரு ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகும் இப்படம், பொங்கல் 2027-இல் வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஆயிரத்தில் ஒருவன் – புதுப்பேட்டை படங்களில் வேண்டும் என்றே அதை செய்தோம்… இயக்குநர் செல்வராகவன்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தென்னிந்திய சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்