டோலிவுட் சினிமாவை நோக்கிச் செல்லும் கோலிவுட் இயக்குநர்கள்… நெல்சன் அடுத்து இவர் படத்தையா இயக்க உள்ளார்?
Director Nelson Dilipkumar: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் நெல்சன் திலீப் குமார். இவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போல டோலிவுட்டில் பிரபல நடிகர் ஒருவரை இயக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

நெல்சன் திலீப்குமார்
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன் திலீப் குமார் கடந்த 2010-ம் ஆண்டு நடிகர்கள் சிலம்பரசன், ஜெய் மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்பு எந்த காரணங்களும் தெரிவிக்கப்படாமலே படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டது. இயக்குநர் நெல்சன் திலீப் குமாருக்கு முதல் படமே பாதியில் நிறுத்தப்பட்டாலும் அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியப் படம் கோலமாவு கோகிலா. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி வேடத்தில் நடித்து இருந்தார். டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தை இயக்கினாலும் அந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக 2021-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார். காமெடியை மூலதனமாக வைத்து திரைத்துறையில் முன்னேறிய நடிகர் சிவகார்த்திகேயனை இந்தப் படத்தில் சிரிக்கவே வைக்காமல் காட்டியிருந்தார் நெல்சன். சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் சிரிக்கவில்லை என்றாலும் படம் பார்த்த ரசிகர்களுக்கு வேற லெவல் சிரிப்பை கொடுத்தது. தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான படங்கள் டார்க் காமெடியை கொண்டு இருந்தது. அதன்படி அடுத்தடுத்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் மற்றும் ஜெயிலர் படங்கள் வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜை தொடர்ந்து டோலிவுட் செல்லும் நெல்சன் திலீப்குமார்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வரும் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது. முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அல்லூ அர்ஜூன் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமாரும் தெலுங்கு சினிமா நடிகரை இயக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… எந்த காட்சி எல்லாம் சென்சார் செய்யப்படும் என்ற அறிவு எச்.வினோத்திற்கு அதிகம் – இயக்குநர் ஈரா சரவணன்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#JRNTR will next be seen in the #NELSAN directorial.
This film takes place after the film #JAILER2. pic.twitter.com/rCFOg2oXtK
— Movie Tamil (@_MovieTamil) January 24, 2026
Also Read… சிம்புவிற்கு முன்னதாக அந்த பிரபல நடிகரை இயக்கும் தேசிங்கு பெரியசாமி – வைரலாகும் தகவல்