மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் படக்குழு… சூர்யாவின் அடுத்தப் பட அப்டேட் இதோ!

Suriya will collaborate with Jai Bhim director TJ Gnanavel | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் மீண்டும் இயக்குநர் டிஜே ஞானவேல் உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் படக்குழு... சூர்யாவின் அடுத்தப் பட அப்டேட் இதோ!

சூரியா

Updated On: 

18 Apr 2026 20:21 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் வருகின்ற மே மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நட்டிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதன்படி இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தாலும் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா நடிக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றது.

மீண்டும் கூட்டணி அமைக்கும் ஜெய் பீம் படக்குழு:

இந்த நிலையில் முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ஜெய் பீம். இந்தப் படத்தை இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கி இருந்தார். உண்மைச் சம்பவங்களை மையாக வைத்து வெளியான இந்தப் படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவை இயக்குநர் டிஜே ஞானவேல் மீண்டும் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Sai Abhynkkar: தனுஷின் டி55 படத்தின் இசையமைப்பில் தீவிரமாக இறங்கிய சாய் அபயங்கர் – வைரலாகும் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது ஓ காதல் கண்மணி படம்!

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..