ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா படத்தின் புது அப்டேட் இதோ

Ramayana: இந்திய சினிமாவில் வரலாற்று புராண கதைகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகின்றது ராமாயணா படம்.

ரன்பீர் கபூர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தின் புது அப்டேட் இதோ

ராமாயணா

Published: 

30 Sep 2025 21:17 PM

 IST

இந்திய சினிமாவில் ஒவ்வொரு விதமான கதைகள் படமாக எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் பக்தி படங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகமாகவே உள்ளது. அதன்படி தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவிலும் தொடர்ந்து இறை நம்பிக்கை உடைய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்தி சினிமாவில் ராமாயணா கதையை மையமாக வைத்து இயக்குநர் நித்தேஷ் திவாரி இயக்கி வருகிறார். முன்னதாக ராமாயணா கதையை மையமாக வைத்து பலப் படங்கள் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். அதன்படி இவர் ராமராக நடித்துள்ளார். மேலும் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து  உள்ளார். அதன்படி இவர் சீதை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் யாஷ் ராவணனாக நடித்துள்ள நிலையில் நடிகர் ரவி துபே அனுமனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று படக்குழு படத்தின் அறிவிப்பு வெளியான போதே அறிவித்தது. அதன்படி இந்த ராமாயணா படத்தின் முதல் பாகம் வருகின்ற 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் அடுத்ததாக ராமாயணா படத்தின் இரண்டாவது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தது.

விறுவிறுப்பாக நடைபெறும் ராமாயணா படத்தின் பணிகள்:

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜூலை மாதம் இறுதியிலேயே நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இதில் படத்தின் ரன்னிக் டைமை இயக்குநர் நித்திஷ் திவாரி முடிவு செய்துவிட்டதாகவும் விஎஃப்எக்ஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடைப்பெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Also Read… இதுதான் கடைசி வார்னிங்… தவறான செய்திகள் பரப்புவர்கள் மீது மகிமா நம்பியார் காட்டம்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாராவின் அன்னபூரனி படம் ஓடிடியில் ரிலீஸ்!