தொடர்ந்து 8-வது முறையாக ரஜினிகாந்த் படத்தில் ஒப்பந்தமாகும் அனிருத்? வைரலாகும் தகவல்
Music Director Anirudh Ravichander: இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர். இவர் தற்போது முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்தின் 173-வது படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் அனிருத்
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர். இவர் நடிகர் ரவிச்சந்தரின் மகன் ஆவார். மேலும் ரஜினிகாந்த் இவருக்கு மாமா முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா குடும்பத்தில் பிறந்த அனிருத் சிறு வயதில் இருந்தே இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக முறையாக இசையைக் கற்றுக் கொண்டார். தொடர்ந்து இவர் அறிமுகம் ஆன முதல் படமே பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்திய அளவில் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் குமார், தனுஷ், சிவகார்த்திகேயன், சிலமபரசன் என பலரது படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். தொடர்ந்து இவரது இசையில் வெளியாகும் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் தற்போது இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஜன நாயகன், ஜெயிலர் 2, அரசன், தி பாரடைஸ் என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தொடர்ந்து இந்திய சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படத்திற்கு இசையமைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.
தலைவர் 173 படத்தில் இணைந்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தில் இசையமைக்க தொடங்கினார் அனிருத். இந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத் அடுத்தடுத்து ரஜினிகாந்தின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இறுதியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திற்கும் அடுத்ததாக வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்திற்கும் தற்போது இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் பரவி வருகின்றது.
Also Read… ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Anirudh is composing the music for #Thalaivar173 🎶. This is the 6th film in which #Rajinikanth & #Anirudh are collaborating 🤝🔥. The film is directed by Ramkumar 🎬 pic.twitter.com/WmKlVYaMDH
— Movie Tamil (@_MovieTamil) November 27, 2025
Also Read… விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசிய நெல்சன் திலீப் குமார் – வைரலாகும் வீடியோ