அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா? வைரலாகும் தகவல்

Arasan Movie Silambarasan Looks: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் உருவாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது நிலையில் இவர் தற்போது அரசன் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா? வைரலாகும் தகவல்

அரசன்

Published: 

02 Jan 2026 15:27 PM

 IST

தமிழ் சினிமாவில்  குழந்தையாக இருக்கும் போதே நடிகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் நடிகர் சிம்புவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் கடந்த பிறந்த நாளை முன்னிட்டு அடுத்தடுத்து அவரது நடிப்பில் உருவாக உள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து உடனடியாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்று ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இவர்கள் படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அரசன் படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக கூட்டணியை அறிவித்தனர்.

அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா?

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு அரசன் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்களும் அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் இந்த அரசன் படத்தின் மூன்று தோற்றங்களில் தோன்றுவார் என்றும் அதன்படி, சிலம்பரசன் 1980, 1992, மற்றும் 1995 ஆகிய மூன்று காலகட்டங்களில் மூன்று விதமான தோற்றங்களில் தோன்றுவார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Karuppu: சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. நியூ இயர் ஸ்பெஷலாக கருப்பு படக்குழு ரிலீஸ் செய்த நியூ போஸ்ட்டர்!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி இசை வெளியீட்டு விழா எப்போது ஒளிபரப்பாகிறது..? எதில் பார்க்கலாம் தெரியுமா?

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி