பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்… யார் யார் வெளியேறப்போறாங்க தெரியுமா?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 11-வது வாரம் இறுதியை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாகவும் அதில் யார் யார் வெளியேறுகிறார்கள் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்... யார் யார் வெளியேறப்போறாங்க தெரியுமா?

பிக்பாஸ்

Published: 

21 Dec 2025 11:16 AM

 IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 77-வது நாளை எட்டியுள்ளது. ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி வந்து பேசுகிறார். அப்படி பேசும் போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிப் பேசி வருகிறார். அந்த வகையில் நேற்று 76-வது நாள் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி வாரம் முழுவதும் நடந்த விசயங்கள் குறித்தும் சண்டைகள் குறித்து வரிசையாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து சாண்ட்ரா கடந்த வாரம் முழுவதும் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களையும் குறை கூறிக்கொண்டு அனைவரையும் தவறாக சித்தரிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார். இது குறித்து அவரிடம் விஜய் சேதுபதி பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சாண்ட்ரா பதட்டத்துடன் செய்த தவறுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து திவயா குறித்து சாண்ட்ரா பல தவறான விசயங்களை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களிடம் பேசியது குறித்து நேரடியாக விசாரித்தார் விஜய் சேதுபதி. அதில் சாண்ட்ரா திவ்யா குறித்து தவறாக பேசியதையும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நேற்று ஒரே நாளில் வாரம் முழுவதும் சாண்ட்ராவின் தவறுகளை வெளிப்படையாக பேசியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பிக்பாஸில் இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு முறை டபுள் எவிக்‌ஷன் நடைப்பெற்று உள்ளது. இந்த நிலையில் இந்த 11வது வார இறுதியில் மூன்றாவது முறையாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. அதன்படி இந்த டபுள் எவிக்‌ஷனில் இன்று முதலாவதாக எஃப்ஜே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நிலையில் அடுத்ததாக ஆதிரை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற உள்ளார். இவர் முன்னதாக 3-வது வாரமே வெளியேற்றப்பட்டு பின்பு வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையைப் பெற்ற ஜூ தமிழ்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அரசன் பட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி… தயாரிப்பாளர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்