அதர்வாவின் இதயம் முரளி படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

Idhayam Murali Movie: தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் அதர்வா முரளி. இவரது நடிப்பில் தற்போது தொடர்ந்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதர்வாவின் இதயம் முரளி படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எங்கு தெரியுமா?

இதயம் முரளி

Published: 

12 Oct 2025 18:19 PM

 IST

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் தான் நடிகர் அதர்வா (Actor Atharvaa). தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அதர்வாவின் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு தொடங்க்கியதில் இருந்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதன்படி முன்னதாக டிஎன்ஏ மற்றும் இரண்டாவதாக தணல் ஆகியப் படங்கள் வெளியானது. அதில் டிஎன்ஏ படம் குழந்தை கடத்தலை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தணல். அதிரடி ஆக்‌ஷன் பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் அதர்வா காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா முரளி நடிப்பில் அடுத்தடுத்து இதயம் முரளி, பராசக்தி என தொடர்ந்து நடித்து வருகிறார்.

அமெரிக்காவில் இதயம் முரளி படத்தின் ஷூட்டிங்:

இந்த நிலையில் நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வருகிறார். இவர் டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்து வருகிறார்.

மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ப்ரீத்தி முகுந்தன், நட்டி நடராஜன், தமன், ரக்சன், நிகாரிக்கா, என பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

Also Read… கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விமல் நடிப்பில் உருவாகும் மகாசேனா படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூரி