சிரஞ்சீவி – நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரலப மலையாள நடிகர்?

Mana Shankara Varaprasad Garu: தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவி தற்போது சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரஞ்சீவி - நயன்தாரா படத்தில் வில்லனாகும் பிரலப மலையாள நடிகர்?

சிரஞ்சீவி

Published: 

04 Oct 2025 15:05 PM

 IST

தெலுங்கு சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி (Actor Chiranjeevi). இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது வாரிசான ராம் சரண் தற்போது சினிமாவில் அறிமுகம் ஆகி முன்னணி நடிகராக வலம் வருகின்ற போதிலும் தற்போது சிரஞ்சீவியும் இளம் தலைமுறையினருக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 4 படங்கள் வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் மன சங்கர வரபிரசாத் கரு படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி எழுதி இயக்கி உள்ளார். இதில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகை கேத்ரின் தெரசா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் தமிழ் சினிமாவில் மெட்ராஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் சைன் டாம் சக்கோ?

சிரஞ்சீவியின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மன சங்கர வரபிரசாத் கரு படத்தில் இருந்து நேற்று சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக யார் நடிக்க உள்ளது என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதன்படி இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சக்கோ வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Rishab Shetty: ஒரு ஆர்டிஸ்ட்தான் அதை செய்ய முடியும்… மணிகண்டனை புகழ்ந்து தள்ளிய ரிஷப் ஷெட்டி!

மன சங்கர வரபிரசாத் கரு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kantara Chapter 1: இதை மட்டும் பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு காந்தாரா படக்குழு கோரிக்கை!