ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது மாமன் படக்குழு… எப்போது தெரியுமா?

Maaman Movie OTT Update: நடிகர் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியானது மாமன் படம். முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்த மாமன் படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது மாமன் படக்குழு... எப்போது தெரியுமா?

மாமன்

Published: 

29 Jul 2025 10:44 AM

தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடித்துவந்த சூரி (Actor Soori)மெல்ல மெல்ல தனது கடின உழைப்பால் உயர்ந்து காமெடி நடிகராக தன்னை உச்சத்தில் நிறுத்தியவர் நடிகர் சூரி. இவர் காமெடியில் கலக்கிய காலங்களில் இவரது கால்சீட்டிற்காக பல முன்னணி நடிகர்கள் காத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படி தனக்கு என சினிமாவில் தனி இடத்தைப் பிடித்த நடிகர் சூரி காமெடியன் மட்டும் இல்லை நாயனகாகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன் (Director Vetrimaaran). ஆம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிகர் சூரி முதன் முறையாக காமெடியன் என்ற அந்தஸ்தில் இருந்து நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் நாயகனாக நடிகர் சூரி நடித்தார்.

அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற அதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி, கருடன் மற்றும் விடுதலை பாகம் 2 என தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து சீரியசான கதைக்களத்திலேயே நடிகர் சூரி நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மாமன் படம் உருவான கதை தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் சூரி தொடர்ந்து சீரியசாகவே நடித்து வருவதால் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தில் நாயகனாக நடிக்க விரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து பல இயக்குநர்களிடைம் தொடர்ந்து கதைக் கேட்டு வந்துள்ளார் சூரி. ஆனால் அது எதுவும் அவருக்கு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸை எடுத்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் சூரியை சந்தித்து கதை கூறியுள்ளார். அந்த கதை சூரிக்கு பிடித்தது. ஆனால் பிரசாந்த் பாண்டியராஜிடம் நான் ஒரு கதை தருகிறேன் அதை நீங்க படமா இயக்குறீங்களா என்று கேட்க அவரும் சம்மதித்துள்ளார்.

Also Read… துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் கண்டிப்பா பாருங்க

அந்த படம் தான் மாமன். அதன்படி சூரி இந்தப் படத்திற்கு கதை எழுத இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூரி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து இருந்தார். இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகு இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளது.

மாமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

Also Read… நடிகர் தனுஷ் நடிப்பில் பார்க்க பார்க்க சலிக்காத படங்கள் ஒரு லிஸ்ட்!