SJ Suryah : எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாள்.. ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
SJ Suryahs Birthday Special Love Insurance Kompany New Poster : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவரின் நடிப்பிலும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்திலும் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்நிலையில் இன்று 2025 ஜூலை 20ம் தேதி எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே. சூர்யாவின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம்
நடிகர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryha) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவராவார். இவர் படங்களை இயங்குவதையும் கடந்து, படங்களில் வில்லன் மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது கில்லர் படத்தில் நடித்துவரும் நிலையில், இப்படத்திற்கு முன் இவர் நடித்த படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany). இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாகத் தெலுங்கு பட நடிகை கீர்த்தி ஷெட்டி(krithi shetty) நடித்துள்ளார். அறிவியல் சார்ந்த மற்றும் டைம் டிராவல் சார்ந்த கதைகளுடன் இப்படம் உருவாகியுள்ளதா கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று 2025, ஜூலை 20ம் தேதியில் எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை (SJ Suryahs birthday) முன்னிட்டு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ரஜினிகாந்தின் கூலி ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. குஷியில் ரசிகர்கள்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு வெளியிட்ட எஸ்.ஜே. சூர்யாவின் நியூ போஸ்டர் :
Happy Birthday dear @iam_SJSuryah sir 🎉 Your incredible talent as an actor, and director continues to inspire and entertain us all. Wishing you a fantastic year filled with success and joy#LIK #LoveInsuranceKompany
#VigneshShivan @pradeeponelife @IamKrithiShetty… pic.twitter.com/9OSQVnk7fQ
— Seven Screen Studio (@7screenstudio) July 20, 2025
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை :
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் 3வது உருவாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் கதைக்களம் பற்றி இணையத்தில் தகவல்கள் கசிந்திருந்தது. இதில் அப்பாவும், மகனும் ஒரே பெண்ணை எதிர் காலத்திலும், நிகழ்காலத்தில் காதலிப்பதுபோன்ற கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இதற்குப் படக்குழு எந்தவித எதிர்வினையும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பா :
விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2025 செப்டம்பர் 18ம் தேதியில் வெளியாகுமெனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளில் வெளியான புதிய போஸ்டரில் படத்தில் ரிலீஸ் தேதி இல்லை என்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் மீதான சந்தேகங்கள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.