Madharaasi: 4வது முறையாக சாதனை.. சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Madharaasi Box Office Collection: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் வெளியான படம் மதராஸி. இப்படமானது வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில், இதுவரை மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Madharaasi: 4வது முறையாக சாதனை.. சிவகார்த்திகேயனின் மதராஸி பட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சிவகார்த்திகேயனின் மதராஸி படம்

Published: 

18 Sep 2025 19:13 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் வெளியான 23வது படம்தான் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் SKxARM என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருந்தார். இந்த மதராஸி படமானது கடந்த 2025ல் செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 5க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்திருந்தார்.

இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்துள்ளது . இந்நிலையில், தற்போது மதராஸி படக்குழு இப்படத்தின் வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படமானது மொத்தம் சுமார் ரூ 100 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

இதையும் படிங்க : ‘நல்லாரு போ’.. டியூட் பட இரண்டாவது பாடல் ரிலிஸ் எப்போது? அறிவிப்பு இதோ!

மதராஸி படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

சிவகார்த்திகேயனின் ரூ 100 கோடி வசூல் வெற்றி படங்கள்

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தொடர்ச்சியாக படங்கள் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் முதல் ரூ 100 கோடியை வசூல் செய்தது எந்த படம் தெரியுமா?. இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான டாக்டர் படம்தான். இந்த படத்தை அடுத்ததாக டான் படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

இதையும் படிங்க : இரண்டு பாகமாக உருவாகிறதா சிலம்பரசனின் STR49? வெற்றிமாறன் கொடுத்த அப்டேட் இதோ!

மேலும் சிவகார்த்திகேயனின் சினிமா அதிகம் வசூல் செய்த படமாக, இறுதியாக வெளியான அமரன் சுமார் ரூ 300 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த 3 படங்களின் வரிசையில், சமீபத்தில் வெளியான மதராஸி படமும் இணைந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் சுமார் ரூ 100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

மதராஸி படமானது வெளியாகி 4 வாரங்களை கடந்த பிறகு ஓடிடியில் வெளியிட அமேசான் ப்ரைம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி, சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி வசந்தின் இந்த மதராஸி படமானது வரும் 2025 அக்டோபர் 3ம் தேதியில் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிதான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.