Sivakarthikeyan: தேசிய விருது தயாரிப்பாளருடன் சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்!
Sivakarthikeyan Next Project: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக மதராஸி படமானது வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து பார்க்கிங்ப் பட தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் கே.எஸ். சினிஸ்
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகாரத்திகேயன் (Sivakarthikeyan). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக மதராஸி (Madharaasi) என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் (AR. Murugadoss) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் சுமார் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி (Parasakthi) படத்தின் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் பார்க்கிங் பட தயாரிப்பாளரான கே.எஸ். சினிஷ் தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த பதிவில் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஸ் (K.S. Sinis), புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: அஜித்குமாருக்கு இப்படி ஒரு பிரச்னையா? – அவரே பகிர்ந்த தகவல்!
தயாரிப்பாளர் கே. எஸ். சினிஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Conversations that stay off-the-record ✨ @Siva_Kartikeyan pic.twitter.com/TGiiyq6nN9
— K.s.Sinish (@sinish_s) October 2, 2025
தயாரிப்பாளர் சோல்ஜர் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்துவருபவர் தயாரிப்பாளர் கே.எஸ். சினிஸ். இவரின் தயாரிப்பில் இறுதியாக பார்க்கிங் படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது 3 தேசிய விருதுகளை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் புதிய படத்தையும், கே.எஸ். சினிஸ் தயாரிக்கவுள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: தமிழில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!
இந்த படமானது இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ள எஸ்.கே.24 படமாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் பராசக்தி இடத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய படங்கள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனின் கைவசம் இருக்கும் படங்கள்
சிவகார்த்திகேயன் தனது கைவசத்தில், கிட்டத்தட்ட 3 படங்களை வைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம், இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. மேலும் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் குட் நைட் பட இயக்குநரின் இயக்கத்தில் 1 படம் என 3 படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.