தனது புதுப் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்? சிவகார்த்திகேயன் கொடுத்த மாஸ் அப்டேட்

Sivakarthikeyan 26 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் உருவாக உள்ள 26-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தனது புதுப் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்? சிவகார்த்திகேயன் கொடுத்த மாஸ் அப்டேட்

சிவகார்த்திகேயன்

Published: 

09 Feb 2026 16:06 PM

 IST

சினிமாவில் எந்தவித பின்புலனும் இல்லாமல் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இறுதியாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பராசக்தி படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் ரூபாய் 100 கோடிக்கும் அதிகாமாக வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குநருடன் இணைய உள்ளார் என்று மக்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். பராசக்தி படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே இயக்குநர் வெங்கட் பிரபு உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி வைப்பது தொடர்பான தகவல்கள் வெளியானது. ஆனால் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார். இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது 26-வது படத்திலும் கூட்டணி வைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

சிவகார்த்திகேயனின் 26-வது படத்தின் அப்டேட் எப்போது வெளியாகிறது?

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் சார்பாக தற்போது உருவாகி உள்ள படம் தாய் கிழவி. இந்தப் படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி உள்ளார். இவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ள நிலையில் இவர் சிவகார்த்திகேயனின் 26-வது படத்தையும் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் வீடியோ ஒன்றில் அவரது 26-வது படத்தின் அப்டேட் வரும் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற 11-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… கார்த்தியின் ஜப்பான் பட தோல்வி.. அதன் முழு பொறுப்பு நான்தான் – இயக்குநர் ராஜு முருகன்!

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் வீடியோ:

Also Read… The Raja Saab: நீக்கப்பட்ட காட்சிகளுடன்.. ஓடிடியில் வெளியாக காத்திருக்கும் ‘தி ராஜா சாப்’.. எப்போது தெரியுமா?

150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்