Simran : அந்த படத்தில் டான்ஸ் ஆட கஷ்டப்பட்டேன்.. நடிகை சிம்ரன் சொன்ன விஷயம்!
Simran About Difficult To Dance In Suriya Movie : நடிகை சிம்ரன் சினிமாவில் 90கள் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து அசத்தியிருக்கிறார். இவரின் நடனத்திற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்நிலையில் சூர்யாவின் படத்தில் நடனமாடுவதற்குக் கஷ்டப்பட்ட விஷயம் குறித்தது அவர் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சிம்ரன் (Simran). இவர் கோலிவுட் சினிமாவில் 90கள் மற்றும் 2000ம் ஆண்டு தொடக்கக்காலத்தில் ஹிட் நடிகையாக இருந்துவந்தவர். இவர் நடிகர்கள் விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு படங்களில் நடிகர் தளபதி விஜய் மற்றும் சிம்ரனின் படங்கள் என்றாலே சூப்பர் ஹிட் நிச்சயம். அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் திருமணத்திற்குப் பின்னும் படங்களில் நடித்து வந்த சிம்ரன். பின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார். படங்களில் சிறப்பு ரோல் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தது வந்தார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் இவர் முன்னணி நடிகையாக நடித்து வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family).
இந்த படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். கடந்த 2025, மே மாதத்தில் வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். சிம்ரனின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது.




இப்படத்தை தொடர்ந்து புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில் நடிகை சிம்ரன் முன்னதாக கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் சூர்யாவின் பிதாமகன் படத்தில் நடனமாடியதை பற்றிப் பேசியுள்ளார். அதைப் பற்றிப் பார்க்கலாம்.
சூர்யாவின் படத்தில் நடனமாடக் கஷ்டப்பட்டது குறித்து சிம்ரன் :
முன்னதாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சிம்ரன், சூர்யாவின் பிதாமகன் படத்தில் சிறப்புப் பாடலில் நடனமாடியதைப் பற்றிப் பேசியிருந்தார். அதில் சிம்ரனிடம் இதுவரை நடனமாடிய படங்களிலே அதிகம் கஷ்டப்பட்ட படம் எது என்று தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு நடிகை சிம்ரன் , ‘பிதாமகனில் சிறப்புப் பாடலில் நான் ஆடியிருந்தேன், அந்த பாடலில் கடைசிப் பகுதியில் எனக்குப் பைத்தியமே பிடித்தது என்று சொல்லலாம். ஆனால் அந்த படத்தில் சூர்யாவுடன் நடனமாடியிருந்தது எனக்குப் பிடித்தது” என்று நடிகை சிம்ரன் ஓபனாக பேசியிருந்தார்.
நடிகை சிம்ரனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
சூர்யா மற்றும் சிம்ரனின் படங்கள் :
நடிகை சிம்ரன் சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் என்ற படத்திலே அவருடன் இணைந்து நடித்திருந்தார். இயக்குநர் வசந்த் இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தளபதி விஜய்யும் முக்கிய நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து, கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், தந்தையாக நடித்திருந்த சூர்யாவிற்கு ஜோடியாக இணைந்து நடித்திருந்தார். மேலும் பாலாவின் பிதாமகன் படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் மட்டும் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.